ரஜினியின் கட்சியில் தனுஷுக்கு என்ன பதவி?: கஸ்தூரி ராஜா போடும் கணக்கு

By Arun VJFirst Published Oct 5, 2019, 11:40 PM IST
Highlights

 தி.மு.க., ம.தி.மு.க. மற்றும் பா.ஜ.வோடு கூட்டணியிலிருக்கும் ராமதாஸையும் சேர்த்து வெளுத்திருக்கிறார் கஸ்தூரி. என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?....

எம்.ஜி.ஆர். என்ன தமிழரா?...
என்று கேட்டு அ.தி.மு.க.வின் தாறுமாறான கோவத்தை வாங்கிக் கட்டியிருக்கிறார்  தனுஷின் அப்பாவான இயக்குநர் கஸ்தூரி ராஜா. அவர் ரஜினியின் சம்பந்தி என்பதால் , கூட்டணியின் நாயகன் பா.ஜ. சொல்வதால் அவருக்கு எதிராக பாய்ச்சல் காட்டாமல் பதுங்கிக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க. இல்லையென்றால் இந்நேரம் தனுஷே கலங்குமளவுக்கு விமர்சன மழை பொழிந்திருக்கும். 


இந்த நிலையில், ஆன் தி வேயில் தி.மு.க., ம.தி.மு.க. மற்றும் பா.ஜ.வோடு கூட்டணியிலிருக்கும் ராமதாஸையும் சேர்த்து வெளுத்திருக்கிறார் கஸ்தூரி. என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?....
“மோடியின் தோற்றத்தையும், நடத்தையையும், நிர்வாகத்தையும் பார்த்து பா.ஜ.வில் சேர்ந்தவன் நான். அவர் எப்படி கட்சியையும், நாட்டையும் நடத்துகிறார் பாருங்கள். ஆனால், மற்ற கட்சிகள் கட்டிங்குக்காக மட்டுமே வேலை செய்கின்றன.
எம்.ஜி.ஆர். மலையாளிதான். ஆனால் அவர் திறமையாக தமிழகத்தை ஆண்டா. ஆனால் தி.மு.க. (ஸ்டாலின்), பா.ம.க. (ராமதாஸ்), ம.தி.மு.க. (வைகோ) போன்றவர்கள் காசுக்காக கட்சி நடத்துகிறார்கள். மக்களின் அறியாமைதான் இவர்களின் மிகப்பெரிய முதலீடாக இருக்கிறது. ரஜினி வந்தால் மட்டுமே இதற்கெல்லாம் ஒரு முடிவு ஏற்படும்.” என்று தன் மகனுக்கு பெண்ணை கொடுத்திருக்கும் சம்பந்தியை தாங்கியிருக்கிறார். 
அதேநேரத்தில் ‘ரஜினி கட்சியில் தனுஷ் இணைவாரா? என்ன பதவி அவருக்கு தரப்படும்?’ என்று கேட்டதற்கு, 
“ஸாரி! எனக்குத் தெரியாது. தனுஷ் ஒரு நடிகர். அவர் நடிப்பில்தான் கவனம் செலுத்துவார்.” என்று கூறியுள்ளார் . 
முதல்ல இப்படித்தானே பாஸ் சொல்லுவீங்க!

click me!