தேர்தலில் போட்டியிட திமுகவுக்கு தடை விதிக்க வேண்டும் ! அதிரி புதிரியாய் அட்டாக் பண்ணும் சசிகலா புஷ்பா !

By Selvanayagam PFirst Published Oct 5, 2019, 10:36 PM IST
Highlights

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு நிதி உதவி வழங்கியிருப்பது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், அந்த நிதி தீவிரவாதிகளிடம் இருந்து பெறப்பட்டதா என தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என மனு அளித்துள்ள சசிகலா புஷ்பா எம்.பி. தேர்தலில் போட்டியிட திமுகவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கொளுத்திப் போட்டுள்ளார்.
 

இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட், கொங்கு மக்கள் தேநிய கழகம்  ஆகிய கட்சிகளுக்கு திமுக தேர்தல் நிதியாக 25 கோடி ரூபாய் கொடுத்ததாக அக்கட்சி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்த கணக்கு வழக்கு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் அதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் திமுகவிடம் விளக்கம் கேட்ட நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், ‘இதுபற்றி உரியவர்களிடம் விளக்கம் சொல்லிவிட்டோம். மற்றவர்களிடம் சொல்ல அவசியம் இல்லை என பதிலடி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் திமுக தாக்கல் செய்திருக்கும் இந்தக் கணக்கு வழக்கு அறிக்கை மீது விசாரணை நடத்துவதன் மூலம்  ஸ்டாலினை முடக்கி விடலாம் என நினைக்கிறது பாஜக. இதையடுத்து திமுகவுடன் நேரடியாக மோத விரும்பாத பாஜக, சசிகலா புஷ்பா மூலம் விவகாரத்தைக் கிளப்ப முடிவுசெய்துள்ளது.

அதன்படி  சசிகலா புஷ்பா தேர்தல்  இன்று தேர்தல் ஆணையத்திடம் 5 பக்கங்கள் கொண்ட புகார் மனுவை அளித்திருக்கிறார். அதில் கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த திமுக  என்ற மாநிலக் கட்சி தனது கூட்டணிக் கட்சிகளுக்கு தேர்தல் நிதியாக 25 கோடி ரூபாய் அளித்துள்ளதாக தேர்தல் ஆணைய ஆவணங்களின் வாயிலாக செய்திகள் வந்திருக்கின்றன.

எந்த அடிப்படையில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு 25 கோடி ரூபாய் கொடுத்தது? இந்த 25 கோடி ரூபாய்க்கான ஆதாரம், அதாவது வந்த வழி என்ன என்பது பற்றி தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் கொடுத்திருக்கிறார்களா? திமுகவால் உதவி பெற்ற கட்சிகளும் இந்த நிதிபற்றி தங்களது தேர்தல் வரவு செலவு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிதி தேச விரோத சக்திகளிடம் இருந்த அதாவது  தீவிரவாத சக்திகளிடம் இருந்து கிடைத்ததா என்ற சந்தேகம் வருகிறது. தேசத்தின் பாதுகாக்கும் நிலைப்புத் தன்மைக்கும் இதனால் அச்சுறுத்தல் வரக் கூடும். எனவே இந்த விவகாரத்தை சிபிஐ போன்ற உயர் விசாரணை அமைப்புகள் விசாரிக்க வேண்டும் என சசிகலா புஷ்பா வலியுறுத்தியுள்ளார்..

இதுபற்றி திமுகவிடம்விளக்கம் கேட்க வேண்டும். அவர்கள் அளிக்கும் விளக்கத்தில் தேர்தல் ஆணையத்துக்கு சந்தேகத்துமிடமின்றி திருப்தி இல்லையென்றால், திமுக தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்வது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்என்று தன் புகாரில் கூறியிருக்கிறார் சசிகலா புஷ்பா.

click me!