மோகன் ஜி நீ செய்வது பச்சை அய்யோக்கியத்தனம்.. தூக்கிபோட்டு குத்தும் வன்னியர் கூட்டமைப்பு.

By Ezhilarasan BabuFirst Published Nov 22, 2021, 4:42 PM IST
Highlights

வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவரான மோகன்ஜி, பட்டியல் இன மக்களையும் விசிக தலைவர் திருமாவளவனையும் மிக இழிவாக சித்தரித்து படம் எடுக்கும்போது எந்த எதிர்ப்பும் காட்டாத பாமக, வன்னியர் சங்கம் இப்போது ஜெய்பீம் திரைப்படத்திற்கு மட்டும் வரிந்து கட்டி வருவது ஏன்

இன்னொரு சமூகத்தையும் அதன் தலைவரையும் மிக இழிவாக சித்தரித்து படம் எடுப்பது மிகப் பெரிய தவறு, அந்த வகையில் ருத்ரதாண்டவம் இயக்குனர் மோகன்ஜி செய்வது சுத்த அயோக்கியத்தனம். அதற்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வன்னியர் கூட்டமைப்பு தலைவர் சி.என் ராமமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். ஜெய்பீம் பட விவகாரத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தி விட்டதாக தமிழகம் முழுவதும் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் நடிகர் சூர்யாவுக்கு எதிராக வன்முறை பேச்சு, போராட்டங்களில் ஈடுபட்டுவரும் நிலையில் வன்னியர் கூட்டமைப்பு மோகன்ஜி இவ்வாறு கடுமையாக விமர்சித்துள்ளது.

தொடர்ந்து தலித் மக்களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனையும் இழிவுபடுத்தும் வகையில் படம் இயக்கிவருகிறார் வருகிறார் மோகன் என்கிற மோகன்ஜி.  இவர் இயக்கிய கடைசி இரண்டு படங்களும் பட்டியல் இன மக்களை விமர்சிக்கும் வகையில் இருந்தது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஜி.ஜி.எம் பிலிம்ஸ் தயாரிப்பில் திரௌபதி என்ற திரைப்படத்தை அவர் இயக்கினார். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மீதும், தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்கள் மீதும் பாமக முன் வைத்த நாடகக்  காதல் என்ற கருப் பொருளை மையப்படுத்தி படம் இயக்கினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும்  எதிர்ப்பு கடுமையாக இல்லாததால் படம் திரையிடப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ருத்ர தாண்டவம் என்ற படத்தை அவர் இயக்கி அது திரைக்கு வந்துள்ளது. அதில் போதைப் பழக்கத்தால் இளம் பெண்கள், இளைஞர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மையப்படுத்தி எடுத்துள்ளார். 

அதிலும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை சித்திரிக்கும் வகையில் அவர் அந்த படத்தை இயக்கியுள்ளார். அதேபோல் அம்பேத்கர் டி ஷர்ட் அணிந்த சிலர் போதை பொருள் விற்பது போன்ற காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளது. அப்படியெனில் அம்பேத்கரை பின்பற்றுகின்றார்கள் போதைப்பொருள் விற்பவராக உள்ளனர் என்பதை அவர் சொல்லாமல் சொல்லியுள்ளார் என்ற விமர்சனமும் அவர் மீது எழுந்துள்ளது. ஆனால் இப்படத்தை தலித் அமைப்புகள் பெரிய அளவில் எதிர்ப்பு காட்டவில்லை, இதனால் அப்படம் சுமுகமாக திரையில் வெளியானது. இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்னரே பாஜக தலைவர் எச்.ராஜா மற்றும் இந்து அமைப்பினர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி போன்றோர் இந்த படத்தை பாராட்டி வரவேற்றனர். குறிப்பாக பாமக மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் இந்த படத்திற்கு மேளதாளம் முழங்கி கொண்டாடினர். பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஏராளமான டிக்கெட்களை கொள்முதல் செய்து இந்த படத்திற்கு ஆதரவு வழங்கியதாகவும் தகவல்கள் வெளியானது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் அதை சார்ந்த அரசியல் கட்சித் தலைவரையும் இப்படி தரக்குறைவாக விமர்சிப்பதை நியாயமா எனவும் பலர் கண்டன குரல் எழுப்பினர். 

ஆம்.. விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனை சித்தரித்து தான் குறிப்பிட்ட காட்சிகள் எடுக்கப்பட்டது என மோகன் வெளிப்படையாகவே கூறினார். இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இந்நிலையில் ஜெய்பீம் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஞானவேல் இயக்கத்தின் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படம்  பழங்குடியின சமூகங்களில் ஒன்றான இருளர் சமூகத்தை சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவரை போலீசார் திருட்டு வழக்கில் அடித்து கொலை செய்த உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டதாகும். இப்படம் ஜாதி, மதம், மொழி, இனம் கடந்து பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதில் வில்லன் கதாபாத்திரத்திற்கு வன்னியர் சங்கத் தலைவராக இருந்த ஜெ. குருவின் பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக கூறி பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் சூர்யாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திட்டமிட்டே தங்களை இழிவு படுத்தும் நோக்கில் சில காட்சிகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இது புதாகாரமாக மாறியுள்ளது.  இந்த விவகாரத்தில் பலரும் சூர்யாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர்.

வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவரான மோகன்ஜி, பட்டியல் இன மக்களையும் விசிக தலைவர் திருமாவளவனையும் மிக இழிவாக சித்தரித்து படம் எடுக்கும்போது எந்த எதிர்ப்பும் காட்டாத பாமக, வன்னியர் சங்கம் இப்போது ஜெய்பீம் திரைப்படத்திற்கு மட்டும் வரிந்து கட்டி வருவது ஏன்? இது அப்பட்டமான சாதி வெறி என்றும் விமர்சித்து வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட கட்சித் தலைவரையும், ஒரு சமூக மக்களையும் உள்நோக்கத்துடன் இழிவுபடுத்தும் நோக்கில் படமெடுத்த மோகனை ஏன் பாமக  கண்டிக்கவில்லை கொண்டாடினீர்கள்.. உங்களுக்கு வந்தா ரத்தும் பிறருக்கு வந்தால் தக்காளி சட்டணியா என்று பலரும் ஆதங்க குரல் எழுப்பிவருகின்றனர். இந்நிலையில் ஜெய்பீம்  விவகாரம் குறித்து யூடியூப் சேல் ஒன்றுக்கு பேட்டு கொடுத்துள்ள வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என் ராமமூர்த்தி ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை குறிக்கும் சில காட்சிகளை வைத்துள்ள நடிகர் சூர்யா அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதே நேரத்தில் பாமகவை போல் இந்த விவகாரத்தில் நாங்கள் வன்முறை அரசியல் செய்ய விரும்பவில்லை, உணர்வுபூர்வமாக இக்கோரிக்கையை முன்வைக்கிறோம் என கூறியுள்ளார். மேலும் பாமகவினர் இந்த விவகாரத்தை வைத்து வன்னிய இளைஞர்களை வன்முறைக்கு தூண்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

அதேபோல் மோகன் என்கின்ற மோகன் ஜி திரௌபதி மற்றும் ருத்ரதாண்டவம் திரைப்படங்களில், குறிப்பிட்ட சமூகத்தையும், சமூகத்தைச் சார்ந்த அரசியல் கட்சியையும் மிக மோசமாக கொச்சைப்படுத்தும் வகையில் படம் எடுத்துள்ளார். இது மிகப் பெரிய அயோக்கியத்தனம். ஏற்கவே முடியாது, மோகன்ஜி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இது மோகன் மட்டுமல்ல இதே படத்தை சங்கர் எடுத்திருந்தாலும் இதைதான் கூறுவேன் என் ஆதங்கம் தெரிவித்துள்ளார். ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தி விட்டதாக சூரிய மன்னிப்பு கேட்கவேண்டும் என ஒரு புறம் கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், வன்னியர் கூட்டமைப்பு, பட்டியில மக்களையும்  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனையும் அவமானப்படுத்திய மோகன்ஜி மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறியிருப்பது. அரசியல் தளத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

 

click me!