சூர்யாவுக்கு எதிராக ஏதாவது நடந்தால் அவர்கள் மீது பாம்பை எறிவோம்... திரண்டு வந்த பழங்குடியினர்..!

By Thiraviaraj RMFirst Published Nov 22, 2021, 4:14 PM IST
Highlights

பாம்பு, எலிகளுடன் அவர்கள் நன்றி தெரிவித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

நடிகர் சூர்யாவுக்கு எதிராக அசம்பாவிதங்கள் நடந்தால் அவர்கள் மீது பாம்பை கொண்டு எறிவோம் எனக்கூறி பழங்குடி மக்கள் மதுரையில் போராட்டம் நடத்தினர். 

ஜெய்பீம் படத்தின் ஆக்கத்தில் உள்நோக்கம் ஏதும் இல்லை என்றும், அப்படி யாரேனும் படத்தால் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக படத்தின் இயக்குனர் ஞானவேல் கூறி இருந்தார். ஜெய்பீம் படத்தை உருவாக்கியதற்காகவும், பழங்குடி மக்களின் நலனுக்கு திட்டங்களை கொண்டு வந்ததற்காகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகரும் தயாரிப்பாளருமான சூர்யாவுக்கும், பழங்குடி மக்கள் நன்றி தெரிவித்தனர். பாம்பு, எலிகளுடன் அவர்கள் நன்றி தெரிவித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜெய்பீம் திரைப்பட விவகாரம் கடந்த 3 வாரங்களாக சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து ஏற்கெனவே சூர்யா விளக்கமளித்துள்ள நிலையில் நேற்று இயக்குனர் த.செ.ஞானவேல் விளக்கம் அளித்திருந்தார். நடந்த பிரச்னைகளுக்கு சூர்யா பொறுப்பல்ல. அவரை இதற்குள் இழுக்க வேண்டாம். இவை அனைத்துக்கும் தான் மட்டுமே பொறுப்பு என்று கூறியிருந்தார். இது தொடர்பாக சூர்யாவை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவது துரதிருஷ்டவசமானது என்று தெரிவித்து இருந்தார்.

ஜெய் பீம் படத்தின் ஆக்கத்தில் உள்நோக்கம் ஏதும் இல்லை என்றும், அப்படி யாரேனும் படத்தால் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகவும் ஞானவேல் கூறியிருந்தார். பழங்குடி மக்கள் பிரச்னை, அதிகாரம் இல்லாதவர்கள் பாதிக்கப்படும் விதம் உள்ளிட்டவற்றை பேசிய, ஜெய்பீம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேநேரம் படத்தில் இடம்பெற்றிருந்த அக்னி கலச காலண்டர் காட்சி சர்ச்சையை ஏற்படுத்தி 2 வாரங்களுக்கும் மேலாக சலசலப்பை உண்டாக்கியது.

தற்போது, இயக்குனர் ஞானவேல் வருத்தம் தெரிவித்ததை தொடர்ந்து ஜெய்பீம் சர்ச்சைகள் அடங்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், படத்தை தந்தமைக்காக சூர்யாவுக்கும், பழங்குடி மக்கள் நலனுக்காக திட்டங்களை ஏற்படுத்தியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் பழங்குடி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மதுரையில் நன்றி தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய காட்டு நாயக்க சமூக மக்கள், கழுத்தில் பாம்பையும், கையில் எலியையும் வைத்துக் கொண்டு ஸ்டாலினையும், சூர்யாவையும் வாழ்த்திப் பாராட்டினர்.

click me!