பாமகவின் பலவீனத்தை மறைக்கவே ஜெய் பீம் சர்ச்சை... பிரபல அரசியல் விமர்சகர் ஆவேசம்..!

By Thiraviaraj RMFirst Published Nov 22, 2021, 3:37 PM IST
Highlights

பாமக, வன்னியர் என்ற ஜாதியின் பின்னால் இருந்து கொண்டு தங்களது பலவீனங்களை மறைக்கவே முயற்சி ஜெய் பீம் படத்தை கையில் எடுத்துள்ளது என அரசியல் விமர்சகர் சேகர் சேவியர் தெரிவித்துள்ளார். 

பாமக, வன்னியர் என்ற ஜாதியின் பின்னால் இருந்து கொண்டு தங்களது பலவீனங்களை மறைக்கவே முயற்சி ஜெய் பீம் படத்தை கையில் எடுத்துள்ளது என அரசியல் விமர்சகர் சேகர் சேவியர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர், ‘’ஜெய் பீம் படம் குறித்தான ஏராளமான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. என்னைப் பொறுத்தமட்டில் நான் என்ன புரிந்து கொண்டிருக்கிறேன் என்று சொன்னால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை உயர்த்தி, இன்னொரு சமூகத்தை தாழ்த்தி எடுக்கப்பட்டுள்ளது என்கிற எண்ணம் எனக்கு வரவில்லை. என்னைப் பொருத்தமட்டில் ஆதிக்கத்திற்கும், அடக்குமுறைக்கும் இடையே நடக்கும் சம்பவத்தை குறித்தான ஒரு படம். 

இதில் பாமகவின் ரோல் என்ன என்றால் வன்னிய சமூகத்தை தாக்கி எடுக்கப்பட்ட ஒரு படம் என்று கூறுகிறார்கள். வன்னியர்களில் அதிமுக, திமுக, பாமகவை சேர்ந்த பல கட்சியினரும் இருக்கிறார்கள். ஆனால் வன்னியர் சமூகத்திற்குள் வன்னியர் சமூகத்தின் மீது பாமக தன்னை அடக்கிக் கொண்டிருக்கிறது என்றே நான் பார்க்கிறேன். பொது சமூகம் படத்தை கொண்டாடுகிறது. அது இடை சாதியாக இருந்தாலும், சரி உயர் ஜாதியாக இருந்தாலும் சரி விளிம்பு நிலை மக்களாக இருந்தாலும் சரி, எல்லோரும் இந்த படத்தை கொண்டாடுகிறார்கள். 
நான் பார்ப்பதெல்லாம் என்னவென்றால் குருவோ அல்லது காலண்டர் சம்பந்தப்பட பிரச்னையோ, படத்திற்கு ஜெய்பீம் என்று பெயர் வைத்து தான் பிரச்சனையாக இருக்கும் என்று நான் பார்க்கிறேன். அது தான் அவர்களுக்கு உறுத்தலாக இருக்கிறது என்று நான் பார்க்கிறேன். இந்த படம் மக்களால் கொண்டாடப்பட்டு இருக்கிறது. இதிலிருந்து அவர்கள் என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்றால் பாமக, வன்னியர் என்ற ஜாதியின் பின்னால் இருந்து கொண்டு தங்களது பலவீனங்களை மறைக்கவே முயற்சி எடுத்துள்ளது.

இது பார்ப்பனர்கள் செய்யக்கூடிய ஒரு யுத்தி. அதாவது பெருமை வந்தால் நான் பார்ப்பனன் என்று சொல்லவேண்டியது.  பிரனை வந்தால்  இந்து என்று போய் ஒளிந்து கொள்ள வேண்டியது. இதுதான் காலங்காலமாக ஜாதிய வாதிகளும்,  மதவாதிகளும் செய்யக் கூடிய ஒரு விஷயம். அதாவது பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். வன்னிய கட்சி என்று பெயர் வைக்கவில்லை.

அதனால் தான் அவர்கள் திண்டுக்கல்லில் போட்டிருக்கிறார்கள். ராதாபுரம் என்ற தொகுதி போட்டியிடுகிறார்கள்.  ஆனால் பிரச்சினை வரும்போது ஒரு ஜாதிக்குள் தங்களை பாமக அடைத்துக் கொள்கிறது.  குரு என்பவர் துக்ளக் குருமூர்த்தி கூட என் பெயரை வைத்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். 
 பாட்ஷா படத்தில் கூட மார்க் ஆண்டனி என்று சொல்வார். அதற்காக அவர் பெயர் பொறுந்திய சமூகம் போராட முன் வருமா? 

அப்படி போராட வந்தால் கதாநாயகன் பெயர் ஏபிசி, கதாநாயகி இபிசி என்று தான் பெயர் வைக்க முடியும். ருத்ர தாண்டவம் என்று ஒரு படம் எடுத்தார்கள். அந்த படத்தை நீங்கள் பாருங்கள் அந்த படத்தில் அம்பேத்கர் டி ஷர்ட் போட்டு கட்டி இருப்பார். அந்தப் படத்தின் டைரக்டர், திருமாவளவனை ஒரு குறியீடாக வைத்திருப்பார். அதனை இயக்குநரும் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். சேகுவாரா படத்தை போட்டு விட்டு அங்கு போதை மருந்து கடத்தும் அலுவலகமாக காட்டுகிறார்கள். சேகுவாரா என்றைக்கு போதைமருந்து கடத்திக் கொண்டிருந்தார்? இதையெல்லாம் ஒவ்வொருவரும் கேள்விகளுக்கு வேண்டும்.

 அதை யார் பார்க்கிறார்கள்? இந்த படத்தை பெரும்பான்மையான மக்கள் பார்க்கிறார்கள். பொதுமக்கள் பார்வையில் இருந்து அந்தப் படம் ஏற்றுக் கொள்ளப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதால? என்பதுதான் முக்கியம்.’’ என அவர் தெரிவித்துள்ளார்.

click me!