நியமன பதவியில் வந்தவர்கள் பேச்சை கேட்க வேண்டிய அவசியமில்லை.. ஆளுநர் என்ன ஆண்டவரா? அமைச்சர் சேகர் பாபு.!

By vinoth kumar  |  First Published May 6, 2023, 1:01 PM IST

சிறுமியருக்கு இரட்டை விரல் பரிசோதனை நடைபெற்றதாக எந்தவொரு ஆதாரமும் இல்லை. தீட்சிதர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஆளுநர் கூறுகிறாரா? தீட்சிதர்களுக்கு என தனி சட்டம் உள்ளதா? புகார்கள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


தீட்சிதர்கள் விவகாரத்தில் புகார்கள் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். 
 
சென்னை வில்லிவாக்கத்தில் மேம்பாலப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர் பாபு;- சிறுமியருக்கு இரட்டை விரல் பரிசோதனை நடைபெற்றதாக எந்தவொரு ஆதாரமும் இல்லை. தீட்சிதர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஆளுநர் கூறுகிறாரா? தீட்சிதர்களுக்கு என தனி சட்டம் உள்ளதா? புகார்கள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க;- திராவிட மாடல்னா என்னனு? கேட்கிறவர்களுக்கு மக்களின் மகிழ்ச்சியும், புன்னகையுமே பதில்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

Latest Videos

undefined

ஆளுநர் என்ன ஆண்டவரா? இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆளும் ஆட்சி?  நியமன பதவியில் வந்த ஆளுநர் கூறுவதை எல்லாம் கேட்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஆளுநர் பதவியும் அவர் முன்நிறுத்தும் இயக்கமும் தான் காலாதியாக போகிறது என அமைச்சர் சேகர் பாபு விமர்சித்தார்.

இதையும் படிங்க;-  மன்னிப்பு கேட்க முடியாது.. உங்களால் முடிந்ததை பாத்துக்கங்க.. கனிமொழிக்கு அண்ணாமலை பதில் நோட்டீஸ்..!

மேலும், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 4,000 ஏக்கர் நிலங்கள் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. குறிப்பாக மீட்கப்பட்ட நிலங்களில் பாஜகவை சேர்ந்த 6 பேர் தான் அதிகளவில் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தார்கள். முதலில் ஆளுநர் நன்றி சொல்ல வேண்டும் என்றால், நிலங்களை மீட்ட தமிழ்நாடு அரசுக்கு சொல்ல வேண்டுமே தவிர குறைகளை சொல்ல முடியாது என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

click me!