திராவிட மாடல்னா என்னனு? கேட்கிறவர்களுக்கு மக்களின் மகிழ்ச்சியும், புன்னகையுமே பதில்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

Published : May 06, 2023, 11:54 AM ISTUpdated : May 06, 2023, 12:29 PM IST
திராவிட மாடல்னா என்னனு? கேட்கிறவர்களுக்கு மக்களின் மகிழ்ச்சியும், புன்னகையுமே பதில்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சுருக்கம்

ஆட்சியின் முகம் அதிகாரம் அல்ல அன்பு, சனாதனம் அல்ல சமூகநீதி அதனால், சிலரால் அரசு விமர்சிக்கப்படுகிறது சிலரால் நேசிக்கப்படுகிறது. அனைத்து தரப்பினருக்கும் தேவையான உதவிகளை வழங்கி கைதூக்கி விடக்கூடிய அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது. 

அனைத்து தரப்பினருக்கும் தேவையான உதவிகளை வழங்கி கைதூக்கி விடக்கூடிய அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

தமிழ்நாடு அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கும் "ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி" எனும் மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதனையடுத்து, நிகழ்ச்சியில் உரையாற்றி முதல்வர்;- முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான். மறக்க முடியாத குரல் இது. 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மக்கள் பணிக்காக என்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டேன். 

மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிறைவேற்ற முடியுமா? என என்னை நானே கேட்டுக்கொண்டபோது தெம்பும், தைரியமும் கொடுத்தவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய 3 பேரும்.  2 ஆண்டு சாதனைகளை நான் சொல்லி முடிக்க வேண்டும் என்றால் நீங்கள் 2 நாட்கள் இங்கேயே தங்கி கேட்க வேண்டி இருக்கும். இருண்டு கிடந்த தமிழ்நாட்டில் விடியலை ஏற்படுத்தியுள்ளோம். மக்களின் மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் என்னை இன்னும் உழைக்க ஊக்குவிக்கும், உங்களில் ஒருவனாக உங்களோடு ஒருவனாக இருப்பேன். மக்களுக்கு பணியாற்றுவது எனக்கு புதிதல்ல, சிறுவனாக இருந்துபோதே திராவிட இயக்கத்திற்கு என்னை ஒப்படைத்துக் கொண்டேன். தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பேருக்கும் தான் நான் முதலமைச்சர். அவர்களுக்காக ஓய்வின்றி என் சக்திக்கும் மீறி பணியாற்றி வருகிறேன் என்றார். 

மேலும், பேசிய அவர் எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல். சொன்னதை செய்வதுதான் திராவிட மாடல். அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு திராவிட மாடல் என்றால் என்னவென்று தெரியும்.  திராவிட மாடல்னா என்னனு? கேட்கிறவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மறையாக விமர்சித்தார். சாதியால், மதத்தால் பிரித்துப் பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல்னா புரியாது. உங்கள் புன்னகையே பதில் சொல்கிறது. மக்களுக்கு சம்பந்தமில்லாத பதவியிலிருப்பவர்கள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. 

ஆட்சியின் முகம் அதிகாரம் அல்ல அன்பு, சனாதனம் அல்ல சமூகநீதி அதனால், சிலரால் அரசு விமர்சிக்கப்படுகிறது சிலரால் நேசிக்கப்படுகிறது. அனைத்து தரப்பினருக்கும் தேவையான உதவிகளை வழங்கி கைதூக்கி விடக்கூடிய அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது. அனைத்து மக்களுக்கான வளர்ச்சியை நோக்கி செயல்படுவது திமுக அரசு என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!
Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?