கஸ்தூரி ராஜா சொல்றதுதான்.. தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு கட்டாயம் டைவர்ஸ் ஆகாது.. அடித்துச் சொல்லும் பயில்வான்.

Published : Jan 20, 2022, 11:54 AM IST
கஸ்தூரி ராஜா சொல்றதுதான்.. தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு கட்டாயம் டைவர்ஸ் ஆகாது.. அடித்துச் சொல்லும் பயில்வான்.

சுருக்கம்

தற்போதைக்கு கஸ்தூரி ராஜா கூறும் ஆலோசனையையும், நிபந்தனையும் ஐஸ்வர்யா ஏற்றுக்கொள்ள வேண்டும், தனது மகன் நன்றாக இருக்க வேண்டும், பேரப்பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்ற முயற்சியில் கஸ்தூரிராஜா இறங்கியுள்ளார். 

இயக்குனர் கஸ்தூரிராஜா சொல்வதைத்தான் அவரின் மகன் தனுஷ் கேட்பார், எனவே தனுஷ் ஐஸ்வர்யா இடையே விவாகரத்து ஆகாது என பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. 

தனுஷ் மற்றும் அவரது  மனைவியும் ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ஆகியோர் பிரிந்து வாழப் போவதாக அறிவிப்பு வெளியிட்டிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த அறிவிப்பால் ரஜினியின் குடும்பமே நிலைகுலைந்து போயுள்ளது. இதனால் உச்சக்கட்ட விரக்திக்கு ஆளான ரஜினிகாந்த் வீட்டைவிட்டே வெளியேறி விட்டார் என கூறப்படுகிறது. ஐஸ்வர்யா தனுஷ் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பல விதமான தகவல்கள் வெளியாகி வருகிறது. உண்மையில் அவர்கள் பிரிவதற்கான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. இது ஒருபுறம் இருந்தாலும் 18 ஆண்டுகள் குடும்பம் நடத்தி விட்டு இப்படி திடீரென பிரிவது சரியா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் சினிமா நடிகர்களின் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் தான் என்ற பதில்களும் வந்து சேர்கிறது. சமீபகாலமாக திரைப் பிரபலங்கள் விவாகரத்து செய்வது தொடர்கதையாகி வருகிறது.

நடிகை சமந்தா- நாகசைதன்யா விவாகரத்து செய்தி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது அடங்குவதற்குள் இசையமைப்பாளர் இமான் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இந்த அதிர்ச்சியிலிருந்து திரை ரசிகர்கள் மீள்வதற்குள் ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து அறிவித்துள்ளனர். இது ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. புகழ் வெளிச்சம் அளவுக்கு மீறிய பணம், அதிகார போதை  திருமண உறவை துச்சமென தூக்கி எறியும் அளவிற்கு அவர்களின் மன நிலையை மாற்றி விடுகிறது என்றும்  இந்த விவாகரத்துகள் விமர்சிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான சினிமா நடிகர்களின் வாழ்க்கையில் விவாகரத்து என்பது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. விவாகரத்து செய்வதெல்லாம் அவர்களுக்கு பெரிய விஷயமே இல்லை, படத்தில் மட்டும் தான் ஒழுக்க சீலர்களாக நடிப்பார்கள் ஆனால் உண்மையான வாழ்க்கையில் ஒழுக்கம் கிலோ எவ்வளவு என்று கேட்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். என்று பலரும் சமூக வைதளத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தயாரிப்பாளர் கே.ராஜன் ரஜினி நல்ல மனிதர், அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. கஸ்தூரிராஜா அவரது  மகனுக்கு அறிவுரை கூறி சேர்த்து வைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அதேபோல இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் தனுஷ் தனது முடிவை மாற்றி மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என வலியுறுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதேபோல் பிள்ளைகளுக்காகவாவது இருவரும் சேர்ந்து வாழக்கூடாதா என்று பலரும் ஆதங்க குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில்தான் நேற்று தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, இது குறித்து வாய்திறந்துள்ளார். தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள கஸ்தூரிராஜா, தனியார் நாளேடு ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், கருத்து வேறுபாடு காரணமாக மட்டுமே தனுஷ் ஐஸ்வர்யா சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். இது கணவன் மனைவியிடையே வழக்கமாக நடைபெறும் சண்டை தான்.

இது விவாகரத்து அல்ல. தனுஷும் ஐஸ்வர்யாவும் தற்போது சென்னையில் இல்லை, ஐதராபாத்தில் இருக்கிறார்கள். இருவரையும் போனில் தொடர்பு கொண்டு பேசி அறிவுரைகளை வழங்கியுள்ளேன் என அவர் கூறியுள்ளார். இது இந்த விவகாரத்தில் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக  யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார் பயில்வான் ரங்கநாதன், தனுஷின் குடும்பத்துடன் நெருக்கமாக ஐஸ்வர்யா இருப்பதில்லை என்பதுதான் கஸ்தூரி ராஜ குடும்பத்தின் மன வருத்தம், தனுஷின் குலதெய்வம் கோவில் போன்ற விஷயங்களுக்கு கூட ஐஸ்வர்யா கலந்து கொள்ளாமல் இருந்தவருவதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது இந்த விவகாரத்தில் கஸ்தூரிராஜா மகனுக்கு அட்வைஸ் செய்துள்ளதாக கூறியுள்ளார். மகன் பேரப்பிள்ளையுகள் நன்றாக இருக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். அதேபோல ஒரு நடிகர் விவாகரத்து ஆனவர் என்றால் சினிமாவிலும் மார்க்கெட் குறைந்துவிடும். இது தனுசுக்கு நன்றாக தெரியும்.

தமிழ்நாட்டு மக்களை பொறுத்தவரையில் விவாகரத்து என்று ஒரு நடிகர் முடிவெடுத்துவிட்டால், அவர் பீல்ட் அவுட் ஆகி விடுவார். பார்த்திபன், ராமராஜன் என பல நடிகர்களை உதாரணத்திற்கு கூறமுடியும், பழைய நடிகர் ரவிச்சந்திரனும் அதேபோல நிலைதான் ஏற்பட்டது. எனவே இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் அதையும் தனுஷ் யோசிப்பார், இருவரும் விட்டுக் கொடுத்துதான் 18 ஆண்டுகள் வாழ்ந்து இருக்கிறார்கள். அதேபோல தனுஷின் மாமனார் பேச்சு கேட்கிறாரோ இல்லையோ  ஆனால் தனது தந்தை கஸ்தூரி ராஜா சொன்னால் கேட்டுக் கொள்வார். தற்போதைக்கு கஸ்தூரி ராஜா கூறும் ஆலோசனையையும், நிபந்தனையும் ஐஸ்வர்யா ஏற்றுக்கொள்ள வேண்டும், தனது மகன் நன்றாக இருக்க வேண்டும், பேரப்பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்ற முயற்சியில் கஸ்தூரிராஜா இறங்கியுள்ளார். அதை தனுஷ் கேட்டுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது, எனவே இருவரும் உறவை முறித்துக் கொள்ள மாட்டார்கள். அவரவர் பாணியில் அவரவர் இருந்து கொள்வார்களே தவிற டைவர்ஸ் நடக்காது எனக் கூறியுள்ளார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!