இனி நடவடிக்கை எடுத்து என்ன பயன்? முதல்வரின் அறிவிப்பு வெறும் கண் துடைப்பு.. திமுகவை விடாமல் விரட்டும் TTV.!

By vinoth kumarFirst Published Jan 22, 2022, 1:30 PM IST
Highlights

 பொங்கல் பரிசுத்தொகுப்பில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கூறியிருப்பது வெறும் கண் துடைப்பு நாடகம். தரமற்ற பொருட்கள் மக்களுக்கு போய் சேர்ந்த பிறகு இவர் நடவடிக்கை எடுப்பதால் என்ன பயன் ஏற்படப்போகிறது?

பொங்கல் பரிசுத்தொகுப்பில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கூறியிருப்பது வெறும் கண் துடைப்பு நாடகம் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

பொங்கல் பண்டிகைக்கு 21 பொருள்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்திருந்தது. பரிசுதொகுப்பு பொருட்கள் விநியோகிக்கப்பட்டதில் இருந்து புளியில் பல்லி, மிளகாய் தூளுக்கு பதிலாக மரத்தூள் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதனால், கோபத்தில் உச்சிக்கே சென்ற பொதுமக்கள் அரசு கொடுத்த பொங்கல் பரிசு தொகுப்புகளை மக்கள் சாலையில் கொட்டி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டம் ஈடுபட்டனர். 

தொடர் புகார் மற்றும் குற்றசாட்டுகள் காரணமாக, தமிழக முதல்வர் ஸ்டாலின், பொங்கல் பரிசுத்தொகுப்பு விவகாரம் குறித்து அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதனையடுத்து, முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசுப் பொருட்கள் விநியோகத்தில் புகார்கள் வரக் காரணமான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் மீது கறுப்புப் பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட தேவையான கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு அனைத்து வகையிலும் தரமான பொருட்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார். இந்நிலையில், தரமற்ற பொருட்கள் மக்களுக்கு போய் சேர்ந்த பிறகு இவர் நடவடிக்கை எடுப்பதால் என்ன பயன் ஏற்படப்போகிறது? என டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பொங்கல் பரிசுத்தொகுப்பில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கூறியிருப்பது வெறும் கண் துடைப்பு நாடகம். தரமற்ற பொருட்கள் மக்களுக்கு போய் சேர்ந்த பிறகு இவர் நடவடிக்கை எடுப்பதால் என்ன பயன் ஏற்படப்போகிறது?

பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டெண்டரிலேயே முறைகேடுகள் நடப்பதாக செய்திகள் வெளியான போது அதனைத் தடுத்து நிறுத்திட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தோம். (2/3)

— TTV Dhinakaran (@TTVDhinakaran)

 

பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டெண்டரிலேயே முறைகேடுகள் நடப்பதாக செய்திகள் வெளியான போது அதனைத் தடுத்து நிறுத்திட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தோம். அப்போதெல்லாம் விட்டுவிட்டு தரமற்ற பொங்கல் பரிசு தொகுப்புகள் விநியோகம் முடிந்த பிறகு ஆலோசனை, நடவடிக்கை என்பதெல்லாம் மக்களை ஏமாற்ற செய்யும் வேலைதானே? என காட்டமாக டிடிவி.தினகரன்  கேள்வி எழுப்பியுள்ளார். 

click me!