உபி காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார் ? யோகியுடன் மோதப்போவது இவரா..? சஸ்பென்ஸை உடைத்த பிரியங்கா !!

By Raghupati RFirst Published Jan 22, 2022, 12:41 PM IST
Highlights

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது காங்கிரஸ்.

உபியில் கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரசுக்காக அக்கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் உ.பி., சட்டசபை தேர்தலை முன்னிட்டு  இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டது. இதை காங்கிரஸ் எம்.பி ராகுலும், பிரியங்காவும் இணைந்து வெளியிட்டனர். அந்த அறிக்கையில், 'ஸ்டார்ட் அப் நிதியாக 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்; போலீஸ் துறையில் ஒரு லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும். 

1.5 லட்சம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர்' என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்று உள்ளன. அப்போது பேசிய  ராகுல் காந்தி, ‘இந்த அறிக்கை வெற்று வார்த்தை கிடையாது. இளைஞர்களுடன் ஆலோசித்து அவர்களது கருத்து இடம்பெறும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. உபி இளைஞர்களுக்கு புதிய கொள்கை தேவைப்படுகிறது. புதிய கொள்கையை காங்கிரசால் மட்டுமே தர முடியும். நாங்கள் மக்களை பிரிக்கவில்லை. ஒற்றுமை படுத்துகிறோம்’ என்றார்.

பின்னர் பேசிய பிரியங்கா காந்தி, ‘மாநிலத்தின் மிகப்பெரிய பிரச்னையாக வேலைவாய்ப்பின்மை உள்ளது. இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வளர்ச்சியில் கவனம் செலுத்த மட்டுமே காங்கிரஸ் விரும்புகிறது’ என்றார் 'உபி காங்கிரசின் முதல்வர் வேட்பாளர் யார்' என்று கேள்வி எழுப்ப,  அதற்கு பிரியங்கா, ''உத்தர பிரதேச காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேறு யாருடைய முகமாவது உங்களுக்கு தென்படுகிறதா. பிறகு என்ன ? '' என பதில் அளித்தார்.

'அப்படியானால் நீங்கள் தான் காங்கிரசின் முதல்வர் வேட்பாளரா' என நிருபர்கள் கேட்க, ''ஒவ்வொரு இடத்திலும் என் முகம் இருப்பதை நீங்கள் காணலாம்,'' என பிரியங்கா சஸ்பென்ஸை உடைத்து இருக்கிறார். 'தேர்தலில் போட்டியிடுவீர்களா' என கேட்டதற்கு, ''சட்டசபை தேர்தலில் களமிறங்குவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. முடிவு செய்த பின் வெளிப்படையாக அறிவிப்பேன்’  என்று  பதில் அளித்தார்.

click me!