அதிமுக யார் தலைமையில் இருந்தால் என்ன பிரயோஜனம்..? ஆண்ட கட்சியைக் கதறவிடும் கே. பாலகிருஷ்ணன்.!

By Asianet Tamil  |  First Published Jun 28, 2022, 10:45 PM IST

அதிமுக ஆட்சியிலும் இல்லை, அதிகாரத்திலும் இல்லை. இப்போது அக்கட்சி யார் தலைமையில் இருந்தால் என்ன பிரயோஜனம் வரப்போகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஒபிஎஸ் - இபிஎஸ் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இதுபற்றி திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். கே. பாலகிருஷ்ணன் ராம நாதபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுகவில் எழுந்துள்ள சிக்கல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த கே. பாலகிருஷ்ணன், “அதிமுக ஆளுங்கட்சியாக இருந்ததிலிருந்து தூக்கியெறியப்பட்ட பிறகு, அக்கட்சியில் அதிகாரப் போட்டியில் ஆளுக்கு ஆள் நிற்கிறார்கள். இவை அதிமுகவை பலப்படுத்த பயன்படாது.

இதையும் படிங்க: ஓபிஎஸ்-இபிஎஸ்ஸுக்கு கொம்பு சீவி விட்டாச்சு.. இரட்டை இலையை முடக்குவதே பாஜக லட்சியம்.. பொங்கும் நாஞ்சில் சம்பத்!

Tap to resize

Latest Videos

அதிமுக தற்போது ஆட்சியிலும் இல்லை, அதிகாரத்திலும் இல்லை. இப்போது அந்தக் கட்சி யார் தலைமையில் இருந்து செயல்பட்டாலும் என்ன பிரயோஜனம் வரப்போகிறது? மக்கள் மீது அக்கறை இருக்குமானால், அதிமுகவில் இந்தப் போட்டி வந்திருக்கக் கூடாது.” என்று கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் அவ்ர் கூறுகையில், “அதிமுகவுக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை. மத்தியில் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்திருக்கிற அக்னி பாதை திட்டம் பற்றியெல்லாம் அதிமுகவுக்கு எந்தக் கவலையும் இல்லை. அதுமட்டுமல்ல, நாடாளுமன்ற ஜனநாயகம் பழிவாங்கப்படுவதைப் பற்றியும் அவர்களுக்கு கவலை இல்லை. 

இதையும் படிங்க: அதிமுகவை வழி நடத்த உண்மையில் யாருக்கு உரிமை.? 35 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். எழுதி வைத்த உயிலில் தீர்வு.!

மகராஷ்டிராவில் சிவசேனா எம்எல்ஏக்களை கடத்திக் கொண்டுபோய், அஸ்ஸாமில் வைத்துக்கொண்டு கூத்தடிக்கிறார்கள். அதைப் பற்றியும் அவர்களுக்கு கவலை இல்லை. இந்தியாவில் ரயில்வே உள்பட பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் விற்பனை செய்யப்படுகிறது. தனியார் ரயில் தமிழகத்தில் ஓட ஆரம்பித்து விட்டது. மதுரையிலிருந்து சென்னைக்கும், கோவையிலிருந்து சீரடிக்கும் தனியார் ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. இதைப் பற்றியெல்லாம் அதிமுக கவலைப்படவில்லை" என்று அதிமுகவை விமர்சனம் செய்து கே. பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்தார். 

இதையும் படிங்க: இபிஎஸ் தரப்பின் அதிரடி ராஜதந்திரங்கள்.. புதிய பொருளாளரையே முடிவு செய்த இபிஎஸ்.? அவ்வளவுதானா ஓபிஎஸ்.?
 

click me!