
கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை செய்யப்பட்டதற்கு காரணம் என்ன? என முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஜெயலலிதா ஓய்வெடுக்கும் எஸ்டேட்டான கொடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு ஓம் பகதூர் எனபவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவரை நள்ளிரவில் மர்ம கும்பல் ஒன்று கொலை செய்து விட்டு தப்பி சென்றது. மேலும் மற்றொரு காவலாளியான கிஷன் பகதூர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து முன்னாள் முதலமைச்சர் ஒ.பி.எஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை செய்யப்பட்டதற்கு காரணம் என்ன?
இந்த கொலையால் சட்டம் ஒழுங்கு முறையாக இல்லையோ என்ற கேள்வி எழுகிறது.
ஜெயலலிதா புகழுக்கு குறைவு ஏற்படாமல் காக்கின்ற பொறுப்பு அரசுக்கு உள்ளது.
மக்களிடம் ஏற்பட்டுள்ள குழப்பங்களை அரசு தீர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.