சசிகலாவின் எதிர்காலம் என்ன..? பாஜகவுடன் திரைமறைவில் திமுக நடத்தும் பேரம்..?

By Thiraviaraj RMFirst Published Feb 2, 2021, 3:46 PM IST
Highlights

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிவிட்டு சிறையை நோக்கிப் புறப்பட்ட சசிகலா, ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று, அடித்து சபதம் செய்தார். ஓ.பி.எஸை ஓரங்கட்டிய அவர், தான் பா.ஜ.க.வால் பழிவாங்கப்பட்டதாக நினைத்து அந்த சபதத்தை செய்ததாக பார்க்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிவிட்டு சிறையை நோக்கிப் புறப்பட்ட சசிகலா, ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று, அடித்து சபதம் செய்தார். ஓ.பி.எஸை ஓரங்கட்டிய அவர், தான் பா.ஜ.க.வால் பழிவாங்கப்பட்டதாக நினைத்து அந்த சபதத்தை செய்ததாக பார்க்கப்பட்டது.

டி.டி.வி.திகனரன், பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா அடைக்கப்பட்ட காலக்கட்டத்தில் சுமூகமாக நடந்துக்கொள்ளாமல் நம்பர் 1 அதிகாரத்திற்காக இவரது உறவினர்கள் அனைவரும் கட்சியை விட்டு வெளியேற்றி விட்டு, அதிமுகவுடன் ஒட்டும் இல்லாமல் உறவும் இல்லாத சூழலை உருவாக்கிக்கொண்டார். அவர் செய்த மிகப்பெரி தவறு அ.ம.மு.க. என்ற புதிய கட்சியை துவங்கியதுதான். சிறையிலிருந்து விடுதலையாகும் சசிகலாவை மீண்டும் அ.தி.மு.கவில் சேர்க்கும் எண்ணமே இல்லை எனத் தெரிவித்து விட்டார் எடப்பாடி பழனிசாமி. சசிகலாவும், ஜெயலலிதாவும் இருந்த போயஸ் கார்டன் இல்லம் அரசுடமையாக்கப்பட்டு, அங்கு நினைவில்லமும் அமைக்கப்பட்டுவிட்டது. இதுகுறித்து எந்த தூதும் சசிகலா அனுப்பவில்லை. சமரச நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை.

ஏற்கனவே பொதுச்செயலாளர் என்ற பொறுப்பிலிருந்து தன்னை வெளியேற்றவிட்டு தற்போது அதிகார மிக்க பொறுப்பில் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் இருவரும் அதிகாரத்தை பகிர்ந்துக்கொண்டார்கள். அப்போதுகூட சசிகலா வழக்கு தொடுக்கவில்லை. இதில் பா.ஜ.க.வின் அடக்குமுறை இருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாகிறது.

அதிமுகவின் இன்றைய கட்சித் தலைமையின் எந்தவித வரவேற்பு மற்றும் எதிர்ப்பின்றி சசிகலா டிஸ்சார்ஸ் ஆகி தொண்டர்களின் மிகப்பெரிய வரவேற்புடன் காரில் அதிமுக கொடியுடன் வழியெங்கும் விண்ணை முட்டும் ஆரவாரத்துடன் பவனி வந்தார். இதனை நம்பி சசிகலாவின் பக்கம் மெல்ல சிலர் நகர்ந்து வந்தாலும் எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் இருவரின் பிடிதான் என்றைக்கும் ஓங்கி இருக்கும்.

எடப்பாடியை நகர்த்த வேண்டுமாயின் ஓ.பி.எஸின் கையை உயர்த்த வேண்டும். ஆனால் இந்த யோசனை சசிகலாவுக்கு தோணாது. அல்லது தேர்தலில் அதிமுகவை தோல்வி அடையச்செய்து அதன் பிறகு அதிமுகவை கைப்பற்றுவது என இரண்டு யுக்திகள் இருக்கின்றன. ஆனால், முன்னர் செய்ததுபோல பழிவாங்கும் யோசனையுடன் ஓ.பி.எஸை விலக்கி, தன் அதிகாரத்தை நிலைநாட்ட ஆசைப்பட்டதுபோல இப்போதோ ஏதோ அதிரடியாக செயல்படுவதுபோல் நினைத்து எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸை பழிவாங்கும் நோக்கில் கட்சியை கைப்பற்றி அதோடு ஆட்சியை பிடிக்க நினைத்தால் அது தோல்வியில் போய் முடியும்.

முழு அதிகாரம் கிடைக்க பிஜேபி யாரையும் விடாது. குறிப்பாக திமுகவையும் விடாது. திமுகவே திரைமறைவில் பேரம் நடத்திக் கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில் சசிகலாவால் ஒன்றுமே செய்ய முடியாது. அதோடு சசிகலாவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை என்பதும் ஏன் முக்குலத்தோர் மத்தியிலும் சசிகலாவின் முந்தைய நடவடிக்கைகள் மற்றும் ஊழல் புகார்களால் சசிகலாவை யாரும் ஆதரிக்க தயாராக இல்லை. இன்னும் அறிதியிட்டு சொல்ல வேண்டுமாயின் ஒரு 50,000 பேரை விலைக்கு வாங்கி வேலைக்கு அமர்த்திக்கொண்டு தேர்தலை சந்திப்பது என்பது கையை சுட்டுக்கொள்ளும் வேலை. இதனை ஏற்கனவே டி.டி.வி உணர்ந்திருப்பார்.

சசிகலாவுக்கு ஆத்மார்த்தமாக மற்றும் சிறந்த சாணக்கியராக காலத்திற்கும் நிலைத்து நிற்க வேண்டுமாயின் மோடிக்கு எதிரான ஒரு வியூகத்தை அமைத்து பா.ஜ.க.வை தனிமைப்படுத்தி அதிமுகவுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஆனால் அவர் காலில் எல்லோரும் விழ வேண்டும் என்றே எல்லாவற்றிற்கும் தன்னிடம் சம்மதம் பெற வேண்டும் என்றும் இவர் இனி எதிர்பார்க்க முடியாது. இதற்கு எதற்குமே டி.டி.வி உடன்படமாட்டார்.

அவருக்கு கௌரவம் முக்கியமா அல்லது பழிதீர்க்க வேண்டுமா என்பதை சசிகலாவே முடிவு செய்ய வேண்டும். சசிகலாவின் மவுசு ஜெயலலிதா இருக்கும்வரை மட்டும்தான் என்பதை காலம் அவருக்கு உணர்த்தும்.

click me!