கோரத்தாண்டவமாடும் நிவர்... கடலுக்கு சென்ற மீனவர்கள் 32 பேரின் கதி என்ன..? கலங்கும் காரைக்கால்..!

Published : Nov 26, 2020, 11:38 AM IST
கோரத்தாண்டவமாடும் நிவர்... கடலுக்கு சென்ற மீனவர்கள் 32 பேரின் கதி என்ன..? கலங்கும் காரைக்கால்..!

சுருக்கம்

 67 மீன்பிடி படகுகள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றடைந்தன. 23 மீன்பிடி படகுகள் மட்டுமே கரை திரும்ப வேண்டியிருந்தது.

கடலுக்கு சென்ற காரைக்கால் மீனவர்கள் 32 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என காரைக்கால் மாவட்ட மீன்வள துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிவர் புயல் அபாயத்தால் கடலுக்கு யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். முன்பே கடலுக்கு சென்றவர்கள் கரைக்கு திரும்பும்படியும் அறிவிக்கப்பட்டது. அதன்படி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. ஏற்கனவே மீன்பிடிக்க சென்றவர்களும் உடனடியாக கரை திரும்பினர்.

இந்நிலையில், காரைக்கால் மாவட்டத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பலர் நிவர் புயலின் காரணமாக இன்னும் ஊர் திரும்பவில்லை. சிலரை தொடர்புகொள்ளவும் முடியவில்லை என மீனவர்கள் தரப்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் மாலை வரை 10 படகுகளில் உள்ள மீனவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என காரைக்கால் மாவட்ட மீன்வள துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், காரைக்கால் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் கவியரசன் விடுத்துள்ள அறிக்கையில், ‘காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 192 மீன்பிடி விசை படகுகளில், 102 படகுகள் பாதுகாப்பாக காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தன. 67 மீன்பிடி படகுகள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றடைந்தன. 23 மீன்பிடி படகுகள் மட்டுமே கரை திரும்ப வேண்டியிருந்தது.

அதில் 7 படகுகள் ஆங்காங்கே கரை திரும்பிய நிலையில், மீதமுள்ள 16 படகுகளில் 14 படகுகள் காரைக்கால் துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. எஞ்சிய 2 படகுகளில் சென்ற 32 மீனவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.  இதனால் 32 மீனவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை’ என கூறி உள்ளார். 

PREV
click me!

Recommended Stories

களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி
அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..