ஓபிஎஸ் சபரீசன் சந்திப்பு பின்னணி என்ன? டிடிவி.தினகரன் ஓபன் டாக்..!

By vinoth kumar  |  First Published May 8, 2023, 8:57 AM IST

ஏற்கனவே திமுகவின் பி டீம் ஓபிஎஸ் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் விமர்சித்து வரும் நிலையில் இந்த புகைப்படங்களை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ‘பூனைக்குட்டி வெளியே வந்தது’ என குறிப்பிட்டுள்ளார். 


வரும் நவம்பர் மற்றும் டிசம்பருக்குள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த தன்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 6ம் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தைக் காண முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் வந்திருந்தார். அவர் புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி கேலரியில் அமர்ந்து போட்டியை ரசித்து பார்த்து கொண்டிருந்தார். பின்னர், போட்டி முடிந்த சிறிது நேரத்தில் முதல்வர் ஸ்டாலினின்  மருமகன் சபரீசனுடன் ஓபிஎஸ் சந்தித்த புகைப்படம் வைரலாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- OPS Meet Sabareesan: சபரீசனை ஓபிஎஸ் சந்தித்தது ஏன்? உண்மையை போட்டுடைத்த மகன் ஜெயபிரதீப்..!

ஏற்கனவே திமுகவின் பி டீம் ஓபிஎஸ் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் விமர்சித்து வரும் நிலையில் இந்த புகைப்படங்களை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ‘பூனைக்குட்டி வெளியே வந்தது’ என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ஓபிஎஸ், சபரீசன் சந்திப்பு நட்பு ரீதியான சந்திப்பு என டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்;- ஓபிஎஸ் - சபரீசன் சந்திப்பு இயல்பானது. ஓ.பன்னீர் செல்வம், சபரீசன் சந்திப்பு நட்பு ரீதியான சந்திப்பு என்றுதான் நான் பார்க்கிறேன். இதில், வேறு உள்நோக்கம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. அதிமுக பொதுச்செயலாளருக்கு நாம் அறிவுரை கூற முடியாது. மக்கள் தான் சரியான அறிவுரையை கொடுக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. அப்போது மக்கள் முன்னேற்ற கழக நிலைபாடு தெரியும். வரும் நவம்பர் மற்றும் டிசம்பருக்குள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த தன்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்.

இதையும் படிங்க;-  ‘பூனைக்குட்டி வெளியே வந்தது’ சபரீசனை சந்தித்த ஓபிஎஸ்... வச்சு செய்த ஜெயக்குமார் - வைரலாகும் டுவிட்

ஓ.பன்னீர் செல்வம் மாநாடு குறித்து நான் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. மக்கள் தான் முடிவு செய்யும் இடத்தில் உள்ளனர். கொடநாடு வழக்கில் பழனிச்சாமி, திமுகவோடு ரகசிய உடன்பாடு வைத்துள்ளார் என்ற சந்தேகம் அமைந்துள்ளது.  தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்க திமுக ஆட்சி பழனிச்சாமி ஆட்சியை விட மிகவும் மோசமாக சென்று கொண்டுள்ளது. 

நான் உயிரோடு இருக்கும் வரை அதிமுகவை மீட்பதில் பின் வாங்க மாட்டேன். அதிமுகவின் பை லாவையே மாற்றிவிட்டு துரோகம் செய்துவிட்டு இன்று பொதுச்செயலாளர் என்ற பதவியை எடப்பாடி பழனிசாமி விலைக்கு வாங்கியுள்ளார். கூவத்தூரில் யாரையும் நாங்கள் விலைக்கு வாங்கவில்லை. எம்எல்ஏக்கலெல்லாம் ஒன்று கூடி நாங்கள் ஒன்றாக உள்ளோம் என்பதை வெளிப்படுத்தும் இடமாக கூவத்தூர் இருந்தது. தவிர அங்கே யாரையும் விலை கொடுத்து நாங்கள் வாங்கவில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக ஒரு பெரிய கூட்டணி உருவாகும் வாய்ப்பு உள்ளதாக டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். 

click me!