ஸ்டாலின் என்ன மகாத்மா காந்தியா..? ஓ.பி.எஸ் கேள்வி..!

Published : Feb 03, 2021, 01:10 PM IST
ஸ்டாலின் என்ன மகாத்மா காந்தியா..? ஓ.பி.எஸ் கேள்வி..!

சுருக்கம்

கிராமசபைக் கூட்டம் நடத்த மு.க.ஸ்டாலின் என்ன மகாத்மா காந்தியா? என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.  

கிராமசபைக் கூட்டம் நடத்த மு.க.ஸ்டாலின் என்ன மகாத்மா காந்தியா? என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.
 
சென்னை - திருவெற்றியூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அப்போது, ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து விலகிய 500-க்கும் அதிகமானோர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். துணை முதல்வருக்கு வீரவாளும், செங்கோலும் பரிசளிக்கப்பட்டது.

கூட்டத்தில் உரையாற்றிய ஓ.பன்னீர்செல்வம், தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக அதிமுக அரசு நிறைவேற்றி வரும் பல்வேறு நலத் திட்டங்களைப் பட்டியலிட்டார். திமுக ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்துக்கு கேடு விளைவிக்கும் திட்டங்களை தடுக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். மேலும் பேசிய அவர், கிராமசபைக் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் தான் நடத்த வேண்டும். கிராமசபைக் கூட்டம் நடத்த ஸ்டாலின் என்ன மகாத்மா காந்தியா? என கேள்வி எழுப்பினார்.

PREV
click me!

Recommended Stories

TVK vs Congress: காங்கிரஸ் எச்சரித்தும் கேட்காத தவெக! விஜய் பிரதமர் விவகாரத்தில் கூட்டணி விரிசலா?
DA Hike: அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு! சட்டசபையில் வெளியான சூப்பர் அறிவிப்பு