எம்எல்ஏ, எம்.பி. ஆசையை விட்டு விடுங்கள்... நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கிய வைகோ..!

Published : Feb 03, 2021, 12:56 PM IST
எம்எல்ஏ, எம்.பி. ஆசையை விட்டு விடுங்கள்... நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கிய வைகோ..!

சுருக்கம்

வைகோ தலைமையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எழுவர் விடுதலை, வேளாண்சட்டங்களை நீக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களில் வடமாநிலத்தவர்கள் மட்டுமே வேலைக்கு அமர்த்தப்படுவது தடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில், அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், ராஜூவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேறரிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும், நிறுவனங்களில் வடமாநிலத்தவர்கள் மட்டுமே வேலைக்கு அமர்த்தப்படுவது தடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

பின்னர், கூட்டத்தில் பேசிய வைகோ;- எம்.எல்.ஏ, எம்.பி.யாக வேண்டும் என்ற ஆசையை எல்லாம் விட்டுவிடுங்கள். ஊரில் இருந்து கொடியேற்றக் கூடிய தொண்டர்கள் பதவியை எதிர்பார்க்கிறார்களா? என பேசியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!
வேர் இஸ் அவர் லேப்டாப்..? முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!