
வேலுார் மாவட்ட, அ.தி.மு.க., முன்னாள் மாணவரணி செயலர் ரமேஷ் உள்ளிட்ட, 3,000 பேர், கடந்த மாதம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தனர். அவர்களுக்கு தி.மு.க.,வில் இன்னமும் எந்த பதவியும் கொடுக்கவில்லை. ஆர்வக்கோளாறில் எவர்கள் 'முதல்வர் இ.பி.எஸின் 1,000 கோடி ரூபாய் ஊழல்' என ஒரு பேனரை வைக்க அனுமதிக்க வேண்டும் என வேலுார் போலீசாரிடம் மனு கொடுத்தனர். போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுத்து இருக்கிறார்கள். இந்த விஷயம், உள்ளூர் நாளிதழில் வந்து விட்டது.
உடனே, தி.மு.க., நிர்வாகிகள், அவர்களை கூப்பிட்டு நீங்கள், கட்சியில் ஜூனியர். அடங்கி இருக்க வேண்டும். பேனர் வைப்பதற்கு முன்னால் எங்களிடம் அனுமதி வாங்க வேண்டும் என, சொல்லியிருக்கிறார்கள். இதனால் கடும் அப்செட்டில் இருக்கிறார்கள் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவியவர்கள்.