"150 தொகுதி ஜெயிப்பீங்கன்னு சொன்னீங்க" விட்ட உதார் என்னாச்சு! பிரிச்சு மேயும் பிரகாஷ்ராஜ்!

Asianet News Tamil  
Published : Dec 18, 2017, 03:04 PM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
"150 தொகுதி ஜெயிப்பீங்கன்னு சொன்னீங்க" விட்ட உதார் என்னாச்சு! பிரிச்சு மேயும் பிரகாஷ்ராஜ்!

சுருக்கம்

What has happened to more than 150 places - Prakashraj

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி முகம் கொண்டுள்ளது. இந்நிலையில், குஜராத் தேர்தல் வெற்றி குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

குஜராத் மற்றும் இமாச்சல் சட்டமன்ற தேர்தல் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் மூலம், பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், அன்பிற்குரிய மோடி அவர்களே... வாழ்த்துக்கள். நீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? நீங்கள் ஏற்படுத்தியிருக்கும் மேம்பாட்டின் மூலம் வாரிச்சுருட்டும் வெற்றி ஏற்படவில்லையே. நீங்கள் கூறிய அந்த 150+ தொகுதிகளில் வெற்றி என்னவானது? இப்போதாவது நீங்கள் சில உண்மைகளை உணர நேரம் ஒதுக்குவீர்களா? 

1) பிரிவினைவாத அரசியல் எடுபடவில்லை என்பதை உணர்வீர்களா?

2) பாகிஸ்தான்... மதம்... சாதி... என சமூகத்தை அச்சுறுத்தும் சில அடிப்படைவாதிகள் ஆதரிக்கும் இத்தகைய கொள்கைகளைத் தாண்டியும், இந்தியாவில் மிகப் பெரிய பிரச்சனைகள் உள்ளன என்பதை உணர்வீர்களா?

3) கிராமப்புறங்களில்தான் தீர்க்கப்பட வேண்டிய உண்மையான சிக்கல்கள் இருக்கின்றன என்பதை உணர்வீர்களா?

விவசாயிகள்.... ஏழைகள்... கிராமவாசிகள் புறக்கணிக்கப்பட்ட குரல் இப்போது வலுப்பெற்றிருக்கிறது. அது உங்களுக்கு கேட்கிறதா? சும்மாதான் கேட்கிறேன் என்று நடிகர் பிராகாஷ்ராஜ் பதிவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

5.5 லட்சம் கோடி கடன்.. தமிழக மக்களை கடனாளியாக்கிய முதல்வர் ஸ்டாலின்.. இபிஎஸ் விமர்சனம்!
‘4-ல் 1கூட இல்லை.. ஸ்டாலின் சொல்லும் அத்தனையும் பச்சைப் பொய்..! எடப்பாடி பழனிசாமி சீற்றம்..!