
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒரு லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் எனவும் திமுகவும் டிடிவி தரப்பும் வீண் குற்றச்சாட்டுகளை எழுப்புகின்றனர் எனவும் துணை சபாநாயகர் பொள்ளாட்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
ஆ.கே.நகரில் அதிமுக பணப்பட்டுவாடா செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
சென்னை, ஆர்.கே.நகருக்கு வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரன் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. தற்போது ஆர்.கே.நகரில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் நடப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ள
நிலையில், சூறாவளி பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக வேட்பாளரான மதுசூதனனுக்கு வாக்கு சேகரிப்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் என வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து திமுக தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்.கே.நகர் தொகுதியில், திமுக, அதிமுக, டிடிவி தினகரன் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து பல்வேறு கருத்துகணிப்புகள் வெளிவருகின்றன. அண்மையில் வெளியான கருத்து கணிப்பு ஒன்றில் டிடிவி தினகரன் வெற்றி பெறுவார் என்று வெளியானது.
டிடிவி தினகரன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று அவரின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மதுசூதனன் வெற்றி பெறுவார் என எடப்பாடி பன்னீர் செல்வம் தரப்பு கூறி வருகின்றனர்.
இதனிடையே இன்று தேர்தல் அதிகாரிகள் விக்ரம் பத்ரா, ராஜேஷ் லக்கானி ஆகியோரை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை சபாநாயகர் அதிமுகவினரையே மிஞ்சும் வகையில் மதுசூதனன் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என தெரிவித்துள்ளார்.
மேலும் அதிமுக பணப்பட்டுவாடா செய்யவில்லை எனவும் திமுகவும் டிடிவி தரப்பும் வீண் குற்றச்சாட்டுகளை எழுப்புகின்றனர் எனவும் தெரிவித்தார்.