அதிமுக செயற்குழு கூட்டத்தில் நடந்தது என்ன? அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு விளக்கம்..!

By vinoth kumarFirst Published Sep 29, 2020, 11:10 AM IST
Highlights

 அதிமுக செயற்குழுவில் பூகம்பம் வெடிக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஆரோக்கியமான முறையில் ஜனநாயக ரீதியில் விவாதம் நடைபெற்றது  என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஆரோக்கியமான முறையில் ஜனநாயக ரீதியில் விவாதம் நடைபெற்றது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.  

சென்னை முன்னாள் மேயர் சிவராஜ் 129வது பிறந்த நாளை முன்னிட்டு சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, பாண்டியராஜன், பெஞ்சமின், சரோஜா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார்;- வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது. 

வேளாண் சட்டத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன. விசாயிகள் பிரச்சனை பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு தகுதியில்லை என்றார். மேலும், பேசிய அமைச்சர் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அக்டோபர் 7ம் தேதி அறிவிப்பு வெளியாகும். அதிமுக செயற்குழுவில் பூகம்பம் வெடிக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஆரோக்கியமான முறையில் ஜனநாயக ரீதியில் விவாதம் நடைபெற்றது  என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

click me!