அதிமுக கூட்டத்தில் நடந்தது என்ன? சி.வி.சண்முகம் அடிக்க பாய்ந்தாரா? அன்வர் ராஜா சொல்லும் விளக்கம்..!

By vinoth kumarFirst Published Nov 28, 2021, 1:57 PM IST
Highlights

ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவில் எம்.ஜி.ஆர். காலம் முதல் மூத்த அரசியல்வாதியாக இருந்து வருபவர் அன்வர் ராஜா. முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.பியான இவர், தற்போது அதிமுகவில் சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளராக இருந்து வருகிறார். 

என்னை பேசவிடாமல் தடுத்தது, வெளியேற்ற சொன்னது உண்மைதான் என முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவில் எம்.ஜி.ஆர். காலம் முதல் மூத்த அரசியல்வாதியாக இருந்து வருபவர் அன்வர் ராஜா. முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.பியான இவர், தற்போது அதிமுகவில் சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளராக இருந்து வருகிறார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்லம் பிரிந்து தர்மயுத்தம் நடத்தியபோது, சசிகலா பக்கம் இருந்தவர். பிறகு சசிகலா சிறைக்கு போன பிறகு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக மாறினார்.

பிறகு இருவரும் சேர்ந்த ஒருங்கிணைந்த அதிமுகவில் மூத்த தலைவராக இருந்து வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இரட்டை தலைமையிலான அதிமுகவில் இருந்தாலும் கூட சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவர். இதுவரை சசிகலா தொடர்பாக எந்த ஒரு விமர்சனத்தையும் இவர் முன்வைத்ததில்லை. இதனால் இவரை தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க கட்சி தலைமை தடை விதித்தது. இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து சசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். மேலும், சசிகலா விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் கூறிய கருத்துக்கும் அவர் ஆதரவு தெரிவித்திருந்தார். 

அதேபோல் நடந்து முடிந்த தேவர் குரு பூஜையில் இபிஎஸ் -ஓபிஎஸ் இருவரும் கலந்து கொள்ளாத நிலையில் தனியாளாக சென்று குருபூஜையில் தேவர் சிலைக்கு அன்வர்ராஜா மரியாதை செலுத்தினார் . சசிகலா தரப்பினரும் அதிமுகவும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றும் யார் வேண்டுமானாலும் அதிமுக கொடி பிடிக்கலாம் என தொடர்ந்து கூறி வந்தார். மேலும், சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமியை அன்வர் ராஜா விமர்சிக்கும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்திருந்தால்  எடப்பாடி தன்னை புரட்சித்தலைவர் என்றல்லவா சொல்லியிருப்பார் என கூறியிருந்தார். 

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்  கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது.  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினார். அப்போது, கூட்டத்தில் பேசிய அன்வர் ராஜா தற்போதைய கட்சி தலைமை வலு இல்லாமல் இருப்பதாகவும், எனவே அதனை வலுப்படுத்த சசிகலாவை கட்சியை சேர்க்கலாம்.  இது குறித்து அனைத்து தரப்பினரும் பழைய விஷயங்களை மறந்து விட்டு சசிகலாவை சேர்ப்பது குறித்து யோசிக்க வேண்டும் என தனது கருத்துகளை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்  அன்வர்ராஜா அவை தாக்க முற்பட்டதாக செய்திகள் வெளியானது. 

இந்நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அன்வர் ராஜா;- கடந்த சில மாதங்களுக்கு எடப்பாடி பழனிசாமியை அன்வர் ராஜா விமர்சித்தது பெரும் பூதாகரமாக வெடித்தது. அதை குறிப்பிட்டு, ஒருமையில் பேசிய அன்வர் ராஜா கூட்டத்தில் பங்கேற்க கூடாது. என்னை பேசவிடாமல் தடுத்து, சி.வி.சண்முகம் வெளியேற்ற சொன்னது உண்மைதான் என்று கூறினார். 

இந்த பிரச்சினையை பேசி தீர்த்து விட்டதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் அப்போது பதிலளித்தனர். நான் பேசியது யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று நான் கூட்டத்தில் தெரிவித்தேன். இது பற்றி எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடமும் பேசி விட்டதாக கூட்டத்தில் கூறினேன்.ஒரு அறையில் இருந்து பேசியதை பதிவு செய்து அதை பொதுத் தளத்திற்கு கொண்டு வந்துவிட்டார்கள். இதனால் தான் பிரச்சனை ஏற்பட்டது. இந்த ஆடியோ எப்படி வெளியே வந்தது என்று எனக்கே தெரியாது. எம்ஜிஆருடன் ஒப்பிட்டுதான் எடப்பாடி பழனிசாமியை நான் பேசியிருந்தேன் எனவும் விளக்கமளித்திருந்தார்.

click me!