குற்றவாளிகளைப் பாதுகாக்க இன்னும் என்னென்ன செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு எதிராக கொந்தளித்த ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Jun 30, 2020, 10:36 AM IST
Highlights

இரு அப்பாவிகளின் உயிரைப் பறித்த குற்றவாளிகளைப் பாதுகாக்க இன்னும் என்னென்ன செய்யப் போகிறீர்கள்? பதவியை தவறாகப் பயன்படுத்துபவர்களிடம் இருந்து மக்களைக் காக்க வேண்டிய முதல் அமைச்சர் செயலற்று இருப்பது ஏன்? 

குற்றவாளிகளைப் பாதுகாக்க இன்னும் என்னென்ன செய்யப் போகிறீர்கள்? என முதல்வருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததால் வந்த விவகாரத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் காயங்களுடன் கோவில்பட்டி கிளைச்சிறையில் அனுமதிக்கப்பட்டதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டதில் இருவரும் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இவர்களது நீதி கிடைக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையில் எடுத்து விசாரித்து வருகிறது. மாநில மனித உரிமை ஆணையமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில், கடையிலிருந்து அழைத்துச் செல்லும்போது இருவரும் போலீஸாருடன் தகராறில் ஈடுபட்டனர். கீழே விழுந்து புரண்டனர் என போலீஸ் முதல் தகவல் அறிக்கையில் போட்டுள்ளதை மறுக்கும் வண்ணம் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில்: “இரு அப்பாவிகளின் உயிர்பறித்த குற்றவாளிகளைப் பாதுக்காக்க இன்னும் என்னென்ன செய்யப் போகிறீர்கள் @CMOTamilNadu? பதவியைத் தவறாகப் பயன்படுத்துபவர்களிடம் இருந்து மக்களைக் காக்க வேண்டிய முதல்வரே செயலற்று இருப்பது ஏன்? முதல்வரின் பலவீனம் அதிர்ச்சியளிக்கிறது. #JUSTICEFORJAYARAJANDBENNIX

இருவரும் காயங்கள் ஏதுமின்றி போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டிருப்பதை சிசிடிவி காட்சிகளும், ஊடகங்களின் கோப்புகளும் உறுதி செய்கின்றன.

கொலையாளிகளை IPC 302-ன்கீழ் கைது செய்ய வேண்டும் என -க்கு நான் நினைவூட்ட வேண்டுமா? pic.twitter.com/AdY7Gxnlne

— M.K.Stalin (@mkstalin)

 

#JAYARAJANDBENNIX இருவரும் காயங்கள் ஏதுமின்றி போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டிருப்பதை சிசிடிவி காட்சிகளும், ஊடகங்களின் கோப்புகளும் உறுதி செய்கின்றன. கொலையாளிகளை IPC 302-ன்கீழ் கைது செய்ய வேண்டும் என @CMOTamilNadu-க்கு நான் நினைவூட்ட வேண்டுமா? #ArrestKillersOfJayarajAndBennix” என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். 

click me!