சாத்தான்குளம் தந்தை மகன் மரணம்.. தமிழக அரசு சிபிஐக்கு மாற்றி அரசாணை வெளியீடு.! முடிவுக்கு கொண்டு வந்த முதல்வர்

By T BalamurukanFirst Published Jun 29, 2020, 11:32 PM IST
Highlights

நீதிபதிகள், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவது தமிழக அரசின் கொள்கை முடிவு. அரசின் கொள்கை முடிவுக்கு நீதிமன்ற அனுமதி தேவையில்லை என்று கருத்துத் தெரிவித்தனர். 


தூத்துக்குடி மாவட்டம். சாத்தான்குளத்தை சேர்ந்த  வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளை தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. ஐகோர்ட் உத்தரவின்பேரில் மாஜிஸ்திரேட் விசாரணை நடந்து வருகிறது.இந்த விசாரணையில் மாஜிஸ்ட்ரேட்க்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் அவரை ஒருமையில் திட்டியதாக புகார் எழுந்துள்ளதால் உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் நாளை ஏடிஎஸ்பி டிஎஸ்பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை விடுவிக்க முயற்சி நடப்பதாக புகார் எழுந்தது. தந்தை, மகனுக்கு உடல் நலக்குறைவு, மூச்சு திணறலால் உயிரிழந்ததாக போலீஸ் வழக்கு பதிவு செய்திருக்கிறது.அதே நேரத்தில் செல்போன் கடை முன்பு பென்னிக்ஸ் நண்பர்களுடன் இருந்ததாகவும் போலீஸ் வந்தவுடன் அவர்கள் ஓடிவிட்டார்கள். ஜெயராஜ்ம் பென்னிக்ஸ்ம் தரை உருண்டு புரண்டதால் காயம் ஏற்பட்டதாக எப்ஐஆர் பதிவு செய்திருக்கிறது போலீஸ். எப்ஐஆர் பொய்யான என்பதை சிசிடிவி கேமிரா பதிவு உறுதிபடுத்தியிருப்பது போலீஸக்கு பலத்த அடியை கொடுத்துள்ளது. எனவே வழக்கு பென்னிக்ஸ் தரப்பு ஸ்டராங்காக மாறியிருக்கிறது. நீதிமன்றம் அநீதிகளை பார்த்துக்கொண்டு வேடிக்கை பார்க்காது என்று நீதிபதிகள் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ள நிலையில் இந்த சிசிடிவி பதிவு முக்கியத்துவம் வாய்ந்திருக்கிறது. இதையடுத்து வணிகர்கள் சங்கத்தினர், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் வழக்கை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றி விசாரிக்க வலியுறுத்தினர்.

 சேலம் மாவட்டம் தலைவாசலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பான  வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு விசாரணைக்கு வரும்போது, இதனை தெரிவித்து, அனுமதி பெற்று சி.பி.ஐ.யிடம் இவ்வழக்கு ஒப்படைக்கப்படும் என்றார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சாத்தான்குளத்தில் தந்தை - மகன் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம் செய்ய அனுமதி கேட்டு தமிழக அரசு சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவது தமிழக அரசின் கொள்கை முடிவு. அரசின் கொள்கை முடிவுக்கு நீதிமன்ற அனுமதி தேவையில்லை என்று கருத்துத் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தற்போது இந்த வழக்கு குறித்த விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 


 

click me!