அட கொடுமையே.. மனைவி சாகும் அளவிற்கு என்ன செய்தார் திமுக பிரசன்னா..?? முதற்கட்ட விசாரணையில் பகீர்..

Published : Jun 08, 2021, 04:02 PM ISTUpdated : Jun 08, 2021, 04:05 PM IST
அட கொடுமையே.. மனைவி சாகும் அளவிற்கு என்ன செய்தார் திமுக பிரசன்னா..??  முதற்கட்ட விசாரணையில் பகீர்..

சுருக்கம்

திமுக மாநில செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரச்சாவின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

திமுக மாநில செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரச்சாவின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எருக்கஞ்சேரி இந்திரா நகர் மேற்குப் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் தமிழன் பிரசன்னா. இவர் திமுக வின் மாநில செய்தி தொடர்பு இணை செயலாளராக பொறுப்பில் உள்ளார். இவருக்கு நதியா என்பவருடன் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் நதியா வீட்டின் படுக்கையறையை நீண்ட நேரம் ஆகியும் திறக்கவில்லை, இதனால் பிரசன்னா கதவை நீண்ட நேரம் தட்டியும் அவரது மனைவியிடமிருந்து பதில் இல்லை, இதனையடுத்து கதலை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மின்விசிறியில் பிரசன்னா மனைவி தூக்கிட்டு இருந்தார். 

இதைக் கண்டு அதிரச்சியடைந்த  தமிழன் பிரசன்னா நதியாவை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் அவரின் உடலை மருத்துவமனை சவக்கிடங்கிற்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கொடுங்கையூர் போலீசார் தற்கொலை செய்துகொண்ட நதியாவின் தந்தை ரவி என்பவரிடம் புகாரைப் பெற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

முதற்கட்ட விசாரணையில் நதியா இன்று தனக்கு பிறந்தநாள் என்பதால் அதை விமர்சையாகக் கொண்டாட முகநூலில் பதிவிட வேண்டும் எனக் கூறியதாகவும், அதற்கு கொரோனா காலம் என்பதால் அடுத்த ஆண்டு பெரிய அளவில் கொண்டாடலாம் என தமிழன் பிரசன்னா மறுத்ததால், மனமுடைந்து நதியா, நேற்று இரவு முழுவதும் வருத்தத்தில் இருந்து வந்தார் எனவும், இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரின் குடும்பத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல் துறை தரப்பில் இவர்களுக்கிடையில் வேறு ஏதேனும் பிரச்சனை நடந்துள்ளதா? என்பது குறித்து கொடுங்கையூர் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

PREV
click me!

Recommended Stories

பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!
அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!