தன் மனைவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்..? தமிழன் பிரசன்னா சொன்ன பகீர் காரணம்..!

Published : Jun 08, 2021, 03:59 PM IST
தன் மனைவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்..?  தமிழன் பிரசன்னா சொன்ன பகீர் காரணம்..!

சுருக்கம்

கோபமடைந்த நதியா என்னிடம் சண்டை போட்டுக்கொண்டு நேற்றிரவு முதல் மன விரக்தியில் இருந்தார். 

திமுக பேச்சாளர் பிரசன்னா மனைவி நதியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  மாமனார் ரவி என்பவர் பிரசன்னா மீது புகார் கொடுத்துள்ளார். 

வழக்கறிஞராகவும், திமுகவின் மாநில செய்தித் தொடர்பு இணைச் செயலாளராகவும் பதவி வகித்து வருபவர் தமிழன் பிரச்சன்னா. சென்னை, எருக்கஞ்சேரி இந்திரா நகர் மேற்குப் பகுதியில் வசிக்கிறார். இவரது மனைவி நதியா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மனைவியின் வீட்டில் மாமனாருடன் தமிழன் பிரசன்னா வசித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று வீட்டில் தனியாக இருந்த நதியாவின் அறை நீண்ட நேரமாகத் திறக்காமல் இருந்ததால் காலை 10 மணி அளவில் கணவர் தமிழன் பிரசன்னா அறையை உடைத்து உள்ளே பார்த்தபோது மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் நதியா இருந்துள்ளார். உடனடியாக சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். நதியாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனை மார்ச்சுவரிக்கு அனுப்பப்பட்டது.

மகளின் தற்கொலை குறித்து தந்தை ரவி, கொடுங்கையூர் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் சிஆர்பிசி 174-ன் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், கணவர் தமிழன் பிரசன்னாவிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, “மனைவி நதியாவிற்கு இன்று பிறந்த நாள். தனது பிறந்த நாளை பிரம்மாண்டமான முறையில் கொண்டாடி முகநூலில் பதிவிட வேண்டுமெனக் கேட்டார். கொரோனா காலம் என்பதால் அடுத்த ஆண்டு சிறப்பாகக் கொண்டாடலாம் எனத் தெரிவித்தேன். இதனால் கோபமடைந்த நதியா என்னிடம் சண்டை போட்டுக்கொண்டு நேற்றிரவு முதல் மன விரக்தியில் இருந்தார். காலையில் எழுந்து பார்த்தபோது அவரது அறையில் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

நதியாவின் மரணத்துக்கான காரணம் குறித்து தந்தை உள்ளிட்ட மற்ற உறவினர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனது பிறந்த நாளிலேயே நதியா தற்கொலை செய்துகொண்டது அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆடம்பரமாக பிறந்த நாளை கொண்டாடவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


 

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!