இது என்ன காங்கிரசுக்கு வந்த சோதனை.. திமுக ஒதுக்கிய ஒற்றை சீட்டு.. டெல்லியில் முட்டி மோதும் மூத்த நிர்வாகிகள்.

Published : May 26, 2022, 02:45 PM ISTUpdated : May 26, 2022, 02:48 PM IST
இது என்ன காங்கிரசுக்கு வந்த சோதனை.. திமுக ஒதுக்கிய ஒற்றை சீட்டு.. டெல்லியில் முட்டி மோதும் மூத்த நிர்வாகிகள்.

சுருக்கம்

திமுக சார்பில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒற்றை ராஜ்யசபா சீட்டை பெற தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிதம்பரம்- கே.எஸ் அழகிரி இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திமுக சார்பில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒற்றை ராஜ்யசபா சீட்டை பெற தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிதம்பரம்- கே.எஸ் அழகிரி இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் டெல்லியில் முகாமிட்டு அந்த ஒற்றை மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெறுவதற்கு பகிரத முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. 

காலியாக உள்ள 6 ராஜ்யசபா சீட்டு களுக்கான தேர்தல் ஜூன் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு ஏற்கனவே அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அது ஒரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு திமுக ஒரு ராஜ்யசபா சீட்டை ஒதுக்கியுள்ளது. அதைப் பெறுவதற்கு காங்கிரஸ் கட்சியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. கிட்டத்தட்ட 12 பேர் தங்களது டெல்லி செல்வாக்கை வைத்து அந்த ஒற்றை இடத்தை பெறுவதற்கு டெல்லியில் முட்டி மோதி வருகின்றனர். இந்த போட்டியில் சீனியர்களான ப. சிதம்பரம் மற்றும் கே.எஸ் அழகிரி  முன்னணியில் உள்ளனர். இந்நிலையில் இருவர் மீதும் ஏகப்பட்ட புகார்கள் டெல்லிக்கு பறந்து உள்ளதாக தெரிகிறது. குறிப்பாக இதில் முன்னணியில் உள்ள போட்டியாளருக்கு எதிராக ராகுல் காந்திக்கு இமெயில் மூலம் 500 புகார்கள் பறந்துள்ளதாக கூறப்படுகிறது.

சட்டசபையில் உள்ள எம்எல்ஏக்கள் பலத்தின் அடிப்படையில் திமுகவுக்கு 4 ராஜ்யசபா எம்பிக்களும், அதிமுகவுக்கு 2 எம்பி களை கிடைப்பர். அதில் திமுக 3 எம்பி பதவிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதில் 4வது இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது. அந்த ஒற்றை இடத்தை கைப்பற்றுவதற்கு தான் தற்போது காங்கிரசில் 12 பேர் போட்டியில் இறங்கியுள்ளனர். இந்த ரேஸில் முன்னணியில் உள்ள சிதம்பரம் மற்றும் கே.எஸ் அழகிரி இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.  இதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியின்  தொழில்நுட்ப பிரிவை நிர்வகித்து வருபவரும், தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வியூகம் வகுத்து கொடுத்ததாக கூறிக்கொள்பவருமான பர்வின் சக்கரவர்த்தியும் இந்த ராஜ்யசபா சீட்டை கைப்பற்ற பகீரத முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்றொருபுறம் ராகுல் குட்புக்கில் உள்ள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலுக்கும் ராஜ்யசபா சீட் கிடைக்கும் என்று பேச்சு அடிபட்டு வருகிறது. இப்படி திமுக கொடுத்த ஒரு சீட்டு பெறுவதற்கு காங்கிரஸ் கட்சியில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய 31-ம் தேதி கடைசி நாள் என்பதால் அந்த ஒரு ராஜ்யசபா சீட்டை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் பலரும் டெல்லியில் முகாமிட்டு முட்டிமோதி வருகின்றனர். இந்நிலையில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. அதேநேரத்தில் இந்த பட்டியலில் முன்னணியில் உள்ள சீனியர்களான ப.சிதம்பரம் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவராகவும் உள்ள கே. எஸ் அழகிரி ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு இந்த ராஜ சபா சீட்டை பெறுவதற்கான காய்களை நகர்த்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!