பெரியார் எங்கள் தலைவரும் அல்ல எதிரியும் அல்ல.. எங்கள் வழிகாட்டி.. குழப்பி அடிக்கும் சீமான்.

Published : May 26, 2022, 01:55 PM IST
பெரியார் எங்கள் தலைவரும் அல்ல எதிரியும் அல்ல.. எங்கள் வழிகாட்டி.. குழப்பி அடிக்கும் சீமான்.

சுருக்கம்

தந்தை பெரியார் தமிழ் தேசியத்தின் தலைவரும் அல்ல எங்கள் எதிரியும் அல்ல அவர் எங்கள் வழிகாட்டி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

தந்தை பெரியார் தமிழ் தேசியத்தின் தலைவரும் அல்ல எங்கள் எதிரியும் அல்ல அவர் எங்கள் வழிகாட்டி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து சீமான் பெரியாரிய வாதிகளுக்கு எதிராக மேடைகளில் பேசி வரும் நிலையில் அவர் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி துவங்குவதற்கு முன்னர் பெரியாரிய மேடைகளில் அரசியல் பேசியவர்தான் சீமான் என்பது எல்லோருக்கும் தெரியும். பெரியாரை தனது மானசீக தலைவராக ஏற்றுக்கொண்டு அவரின் கொள்கைகளை வாய்ப்பு கிடைக்கும் மேடைகளில் எல்லாம் பேசி வந்தவர் சீமான். இப்போதும்கூட அவர் பெரியாரின் கருத்துக்களை மேற்கோள்காட்டி எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதை காணமுடியும், அந்த அளவிற்கு பெரியாரிய சித்தாந்தத்தை பிடிப்புடன் பேசக்கூடியவர் அவர். ஆனால் தமிழ் தேசியம் என்ற கருத்தியலை முன்வைத்து நாம் தமிழர் கட்சி துவங்கியது முதல் அவர் பெரியாரியத்தையும், திராவிடத்தையும் எதிர்த்துப் பேசி வருகிறார்.  தமிழர்களின் அடையாளத்தை அழித்தது திராவிடம் தான் என்றும் அவர் கூறி வருகிறார். தான் ஏற்றுக்கொண்ட தமிழ்தேசிய சித்தாந்தத்தின் அடிப்படையில் பெரியாரை விமர்சித்து பேசும் அரசியலை அவர் தீவிரமாக கையில் எடுத்துள்ளார்.

இதை பெரியாரிஸ்டுகள் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பெரியாரிய மேடைகளில் பிரபலமான சீமான் இப்போது பெரியாரை எதிர்ப்பது நன்றி கெட்ட தனம் என பெரியாரிஸ்டுகள் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார் சீமான் பெரியாரை எதிர்ப்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதாவது தொடக்க காலத்தில் பெரியாரிய மேடைகளில் அறிமுகமான சீமான் எதன் காரணமாக பெரியாரை எதிர்க்க நேர்ந்தது என வைக்கப்பட்டுள்ள கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், பெரியார் எங்களுக்கு எதிர்ப்பு கோட்பாடு அல்ல- பெரியாரை தமிழ் தேசிய தலைவராகவும் ஏற்கவில்லை எங்கள் எதிரியாகவும் பார்க்கவில்லை. அண்ணல் அம்பேத்கர், புத்தர், மார்க்ஸ், லெனின், ஏங்கல்ஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், ஸ்டாலின் போன்றோர் வரிசையில் பெரியார் இருக்கிறார்.

பெரியாரை பெருமைக்குரிய வழிகாட்டியாக பார்க்கிறோம், திராவிட கருத்தியலாளர்களைப்போல அதுவே வேதம் என்று இல்லாமல் பெரியாரையே நாங்கள் கேள்விக்கு உட்படுத்துகிறோம். எது ஒன்றையும் சந்தேகி, எல்லாவற்றையும் கேள்வி கேள், ஆய்வுக்குட்படுத்து என்று சொன்னவர் பெரியார். அப்படிப்பட்ட பெரியாரைத்தான் நாங்கள் கேள்வி கேட்கிறோம், விமர்சிக்கிறோம், ஆய்வுக்கு உட்படுத்தவேகூடாது என்று சொன்னால் எப்படி? பெரியாரும் சில விஷயங்களுக்கு போராடினார் இல்லையென்று மறுக்கவில்லை, ஆனால் பெரியார் தான்  போராடினார்கள் என்று சொல்வதை ஏற்க முடியாது. எங்கள் பாட்டன் அயோத்திதாச பண்டிதரிடமிருந்து பகுத்தறிவையும், தோழர் சிங்காரவேலனிடமிருந்து பொதுவுடமை சிந்தனையையும் கற்றுக் கொண்டதாக பெரியாரே கூறியிருக்கிறார். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி