Gobackmodi ட்ரெண்டிங்கை கூலிப்படைகள் தான் செய்கின்றன.. மோடியை வரவேற்க 1 லட்சம் பேர்.. கரு நாகராஜன்.

By Ezhilarasan BabuFirst Published May 26, 2022, 1:08 PM IST
Highlights

Gobackmodi ட்ரெண்டிங்கை ட்ரெண்டிங்கை கூலிப்படைகள் தான் செய்கின்றன என தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் தெரிவித்துள்ளார்.  இந்தமுறை மோடியை வரவேற்று வழியனுப்பி வைக்க ஒரு லட்சம் பேர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Gobackmodi ட்ரெண்டிங்கை ட்ரெண்டிங்கை கூலிப்படைகள் தான் செய்கின்றன என தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் தெரிவித்துள்ளார்.  இந்தமுறை மோடியை வரவேற்று வழியனுப்பி வைக்க ஒரு லட்சம் பேர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க இன்று தமிழகம் வருகை தர உள்ளார். அதற்கான விழா ஏற்பாடுகள் நேரு உள்விளையாட்டு அரங்கில் செய்யப்பட்டுள்ளது.  பிரதமரை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆகியோர் விமான நிலையம் சென்று வரவேற்க உள்ளனர். இந்நிலையில் சென்னை வரும் பிரதமரை வரவேற்க தமிழக பாஜக சார்பில் சுமார் ஒரு லட்சம் பலூன்களை பறக்க விட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் விதமாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படம் பொறித்த வண்ண பலூன்கள், வாங்க மோடி, வணக்கம் மோடி என்ற வாசகங்கள் எழுதிய பலன்கள் இன்று பறக்க  விடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக பலூன்களை பறக்க விட போலீசார் தடை விதித்தனர். கரு.நாகராஜன் தலைமையில் பாஜக தொண்டர்கள் பலரும் பலூன்களை பறக்கவிட திரண்டிருந்த நிலையில் போலீசார் அதனை தடுத்தனர், பின்னர் அதை ஏற்ற அக்கட்சித் தொண்டர்கள் தங்கள் கைகளிலேயே பலூன்களை வைத்து மோடியை வரவேற் கோஷங்களை எழுப்பினர். பின்னர் பலூன்கள் அனைத்தும் ஹீலியம் நிரப்பப்பட்டவைகள் என்பதால் அது அனைத்தையும் ஒரு அறையில் பூட்டி சாவி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன் பின்னர் பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் வணக்கம் மோடி, வாங்க மோடி என்ற வாசகத்துடன்  பலூன்களை பறக்க விட வேண்டும் என வந்தோம், ஆனால் சில பாதுகாப்பு காரணங்களுக்காக பலூன்கள் பறக்க விட முடியவில்லை, ஒரு லட்சம் பலன்களை பறக்கவிட ஏற்பாடு செய்திருந்தோம். பாதுகாப்பு காரணங்களுக்காக தடைவிதிக்கப்பட்டது. இதுனால் அந்த பலன்களை வேறு இடத்திலும் பறக்க விட முடியாது, தற்போது பலூர்களை எதுவுமே செய்ய முடியாது,  அப்படியே ஒரு அறையில் வைத்து சாவியை போலீஸிடம் கொடுத்துள்ளோம் என்றார்.  #Gobackmodi ட்ரெண்டை பற்றிகுறித்த எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,  #Gobackmodi ட்ரெண்டிங் கூலிப் படையினரால் செய்யப்படுகிறது. கடந்த முறை கோபேக்மொடி பாகிஸ்தானில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. ஆனால் இந்தமுறை மோடியை வரவேற்று வழியனுப்ப 1 லட்சம் பேர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றார். 
 

click me!