திராவிட மாடல் என்ன பெரிய மண்ணாங்கட்டி மாடல்... பாஜக பொது.செ கரு.நாகராஜன் நக்கல் பேச்சு.

Published : Jun 08, 2022, 01:26 PM ISTUpdated : Jun 08, 2022, 01:29 PM IST
திராவிட மாடல் என்ன பெரிய மண்ணாங்கட்டி மாடல்... பாஜக பொது.செ கரு.நாகராஜன் நக்கல் பேச்சு.

சுருக்கம்

என்ன பெரிய திராவிட மாடல் மண்ணாங்கட்டி மாடல் என்றும், என்று இவர்கள் திராவிட மாடல் என்று சொன்னார்களோ அன்றே தமிழர்கள் தலையில் மண் விழுந்து விட்டது என பாஜக  மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

என்ன பெரிய திராவிட மாடல் மண்ணாங்கட்டி மாடல் என்றும், என்று இவர்கள் திராவிட மாடல் என்று சொன்னார்களோ அன்றே தமிழர்கள் தலையில் மண் விழுந்து விட்டது என பாஜக  மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறது. அது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வரும் அதே நேரத்தில் எதிர்க்கட்சியான அதிமுக- பாஜக திமுக அரசின் அத்தனை திட்டங்களையும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதிலும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முதலமைச்சர் ஸ்டாலின் முதல் அமைச்சர்கள் வரை அத்தனை பேர் மீதும் அடுக்கடுக்காக ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். அதே நேரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட மேடையில் ஸ்டாலின் மாநில உரிமைகளை முன்வைத்து பேசிய பேச்சு பாஜகவினரை அதிரவைத்துள்ளது. முதல்வரின் அந்த பேச்சை பாஜாகாவினர் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பிரதமர் இருக்கிற மேடையில் ஒரு மாநில முதலமைச்சர் கணக்குப்பிள்ளை போல இப்படி கணக்கு கேட்டு பேசுவதா என்று கடுமையாக முதல்வரை விமர்சித்து வருகின்றனர்.

ஒரு பிரதமர் இருக்கும் மேடையில் மாநில முதல்வர் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கையே சான்று என்றும் முதலமைச்சரின் பேச்சு மிகவும் அவமானகரமானது என்றும் அண்ணாமலை விமர்சித்தார். அண்ணாமலையின் பேச்சுக்கு அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இது ஒருபுறம் இருந்து வரும் நிலையில் திமுகவின் திராவிட மாடல் என்பது பாஜகவினர் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஏன் அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட திராவிட மாடலை மிக மோசமாக தாக்கிப் பேசி வருகின்றனர். இதனையே பாஜகவின் துணை பொதுச் செயலாளர்களில் ஒருவரான கரு நாகராஜன் திராவிட மாடலை மிக கடுமையாக தாக்கியுள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் உங்கள் பார்வையில் திராவிட மாடல் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு என்ன பெரிய திராவிட மாடல் மண்ணாங்கட்டி மாடல் என்று இவர்கள் திராவிடன் என்று சொன்னார்களோ அன்றே தமிழர்களின் தலையில் மண் விழுந்துவிட்டது, ராஜராஜ சோழன் பாண்டியன், வேலு நாச்சியார் போன்ற எல்லாரையும் திராவிடர் என்பார்களா? திராவிடம் திராவிடம் என்று சொல்லி தமிழர்களின் தொன்மங்களை அழித்து விட்டனர் திராவிட மாடல் என்பது வீண் பேச்சு, இந்த வீண் பேச்சையெல்லாம் விட்டு தமிழக மக்களுக்கு தமிழகத்திற்கு நல்ல திட்டங்களைகொண்டு வர வேண்டும், தமிழர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும், திராவிட மாடல் என்று பேச்சை விட்டு அதற்கான வேலையைச் செய்யுங்கள், தமிழர்கள் உரிமைக்காக  பாஜகவை திட்டுகிறேன் மோடியை சண்டை போடுகிறேன் என்கிற நாடகம் எல்லாம் இனி தமிழகத்தில் எடுபடாது. கடைக் கோடி மக்களும் திட்டங்கள் சென்று சேரும் வகையில் அரசு வேலை செய்ய வேண்டும். இதை தான் பாஜக எதிர்பார்க்கிறது என அவர் கூறியுள்ளார். 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அன்புமணி மீது சிபிஐயில் கடும் புகார்..! வயிற்றில் வாயில் அடித்துக் கொள்ளும் ராமதாஸ் குரூப்
விஜய் தூங்குறார்... விஜய் குளிக்கிறார்... என்னங்கடா மீடியா..? கதறும் திமுக ராஜிவ் காந்தி..!