எடப்பாடியார்கிட்ட என்ன நடிப்புடா சாமி!! ஆதாரத்துடன் போட்டு வெளுத்துக் கட்டும் திமுக!

By Vishnu PriyaFirst Published Feb 2, 2019, 3:59 PM IST
Highlights

’ரெண்டாங்கிளாஸ் டீச்சர் இஸ்கூலுக்கு வரலேன்னு கண்ணீர்விட்டீங்களே எடப்பாடியாரே! ஆனா ஒரு யுனிவர்சிட்டியையே இழுத்து மூட கமுக்கமா வேலை பண்றீங்க இல்லையா?’.... நக்கலும், நய்யாண்டியும் கலந்து பொளந்து கட்டுகின்றனர் தி.மு.க.வின்  ஐ.டி.விங் அமைப்பினர். 

’ரெண்டாங்கிளாஸ் டீச்சர் இஸ்கூலுக்கு வரலேன்னு கண்ணீர்விட்டீங்களே எடப்பாடியாரே! ஆனா ஒரு யுனிவர்சிட்டியையே இழுத்து மூட கமுக்கமா வேலை பண்றீங்க இல்லையா?’.... நக்கலும், நய்யாண்டியும் கலந்து பொளந்து கட்டுகின்றனர் தி.மு.க.வின்  ஐ.டி.விங் அமைப்பினர். 

விவகாரம் இதுதான்....சமீபத்தில் ஜேக்டோ - ஜியோ வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. அப்போது, பள்ளி மற்றும் கல்லூரில் ஆசிரியர்கள் பணிக்கு வராமல் போராட்டம் நடத்தினர்.  இரண்டு மூன்று நாட்களைத் தாண்டி போராட்டம் நீண்டபோது ‘மாணவர்களின் படிப்பு பாழ் ஆகிறது. தயவு செய்து அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிட வேண்டும். எதில் வேண்டுமானாலும் சமரசம் செய்யலாம், ஆனால் படிக்கும் பிள்ளைகளின் கல்வியில் வேண்டாம்!’ என்று முதல்வர் உருகி வேண்டுகோள் வைத்தார். இதற்கு ஆசிரியர்கள் சம்மதிக்காத போது, மாணவர்களின் நலனுக்காக எந்த அதிரடி நடவடிக்கையும் எடுக்க அவர் தயார்! என்று அரசு தரப்பும் பூச்சாண்டி காட்டியது. 

அமைச்சர் பெருமக்களும் ஆசிரியர்களின் போராட்டத்தை ‘தேர்வு காலத்தில் மாணவர்களை தவிக்க விடுகிறீர்களே?’ என்று கொந்தளித்தனர். ஒருவழியாக அந்தப் போராட்டங்கள் முடிந்து, ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர். 

இந்நிலையில் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கோயமுத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில்  துணைவேந்தர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, தேர்வு கட்டுப்பாட்டு கூடுதல் அதிகாரி, தொலைதூரக்கல்வியின் இயக்குநர் உள்ளிட்ட மிக முக்கியமான பதவிகள் காலியாக இருக்கின்றனவாம். அதுவும் ஒரு மாதம் ரெண்டு மாதங்களில்லை...ஒரு வருடத்துக்கும் மேலாக இப்படி இருக்கிறதம் நிலைமை. 

முக்கிய பதவிகளில் உரிய அதிகாரிகள் இல்லாததால் அட்மிஷனில் துவங்கி, தேர்வு நடத்துவது, முடிவு வெளியிடுவது என எல்லாமே தடுமாறி தடம் மாறிக்கொண்டிருக்கிறதாம். இதுமட்டுமில்லாது பல்கலையின் இந்த சூழலைப் பயன்படுத்தி பலர் லஞ்சத்தில் மிதக்கிறார்களாம்.

இந்தப் பிரச்னையை எல்லாம் அரசு மற்றும் உயர்கல்வித் துறையின் கவனத்துக்கு கொண்டு போயும் எந்த நடவடிக்கையும் இல்லையாம்! சூழ்நிலை இப்படியே போனால் பல்கலைக்கழ்கம் படுத்துவிடும், அதன் கீழ் உள்ள நூற்றுப் பத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளின் நிலை சிக்கலாகிவிடும் என்று  புலம்பல் வெடித்திருக்கிறது. இவற்றை உரிய ஆதாரத்துடனும் வெளியிட்டிருக்கிறார்கள்.  

பரபரப்பாக வெளியாகி இருக்கும் இந்த தகவலை, அப்படியே கேட்ச் செய்து இணையத்தில் அதகளம் செய்து கொண்டிருக்கிறது தி.மு.க.வின் ஐ.டி. விங். “ஸ்கூல் டீச்சர்ஸ் வேலைக்கு வரலேன்னு என்னா புலம்பல் பேசி, சீன் பண்ணுனீங்க, ஆனா ஒரு பல்கலையை இழுத்து மூடுறதுக்கான அரசியலை பண்ணிட்டிருக்கீங்க உள்ளே. என்னா நடிப்புங்க சாமீ இது! சிவாஜி கணேசன், கமலெல்லாம் கூட உங்ககிட்டே பிச்சை எடுக்கணும் போல.” என்று பொளந்திருக்கின்றனர். 

முகத்திரை கிழிக்கப்பட்ட தமிழக உயர்கல்வித்துறை என்ன செய்யப்போகிறதோ!
 

click me!