கருணாநிதியின் குடும்பத்தினுள் நாரதர் வேலை பார்த்த ரஜினி!! ஆடிப்போன அறிவாலயம்... கொல காண்டில் ஸ்டாலின்!

By Vishnu PriyaFirst Published Feb 2, 2019, 2:08 PM IST
Highlights

‘அரசியல் காலண்டர்ல கடைசிப் பக்கம்ன்னு யாருக்குமே கிடையாது. எதிர்காலத்தில் கூடிய விரைவில் எழுந்து வருவீங்க.’அழகிரியின் பிறந்தநாளில் ரஜினி அவருக்கு சொன்ன வாழ்த்து இதுதான்! என  அ-னாவின் ஆதரவாளர்கள் குதூகலிக்கிறார்கள். அதேவேளையில் ’இவரு ஏன் என் குடும்பத்துக்குள்ளே வந்து அரசியல் பண்றாரு?’ என்று மறுபுறம் கொதிக்கிறார் ஸ்டாலின். ஆக மொத்தத்தினுள் கருணாநிதியின் குடும்பத்தினுள் நாரதர் வேலை பார்க்கிறார் ரஜினி! என்று அறிவாலயத்தில் ஆக்ரோஷ அலைகள். 

ரஜினிகாந்த் அரசியல் பாதையில் அடியெடுத்து வைக்கும் முன்பேயே அவருக்கும் ஸ்டாலினுக்கும் பெரிதாய் ஆகாது. வெளியே சிரித்துக் கொண்டாலும் இருவருக்குள்ளும் உள்ளே பெரும் உரசல்தான் போய்க் கொண்டிருந்தது. 

ஆனால் அதேவேளையில் அழகிரிக்கும், ரஜினிக்கும் ஆத்மார்த்தமான நட்பு இருந்தது. அடிக்கடி இருவரும் சந்தித்துக் கொள்வார்கள். அழகிரி டி.எம்.செளந்தர்ராஜனின் குரலுக்கு வெறி ரசிகர். இந்தப் புள்ளிதான் ரஜினியை அவரோடு இணைத்தது. அதுவும் அழகிரி மத்தியமைச்சரவையில் இருந்தபோதெல்லாம் இருவருக்கும் இடையிலான நட்பு ரொம்பவே நெருக்கமானது. ரஜினியை தனது கிளவுட் நைன் மூவிஸ்  தயாரிப்பில் ஒரு படத்திலாவது நடிக்க வைக்க வேண்டும்! என்பது அழகிரி மகன் தயாவின் பெரிய விருப்பம். 

இந்த நிலையில்தான் கடந்த சில வருடங்களாக அழகிரிக்கு அரசியலில் பெரும் சரிவு உருவானது. ஸ்டாலின் தன்னை சொல்லிவைத்து கட்டம் கட்டுகிறார், அதற்கு அப்பாவும் துணை போகிறார் என்று ரஜினியிடம் வெளிப்படையாகவே வருந்தியிருக்கிறார் அழகிரி. இதை வைரமுத்துவிடம் ரஜினி பகிர, அவர் கருணாநிதியிடம் சொல்லலாமா என யோசிக்கும் போதெல்லாம் ஸ்டாலின் பற்றிய பயத்தால் தவிர்த்துவிடுவார். 

சூழல் இப்படியிருக்கும் போதுதான்  ஜெயலலிதா மரணத்துக்குப் பின், இப்போதிருந்து ஒரு வருடத்துக்கு முன்னள் ரஜினி தன் அரசியல் பிரவேச முடிவை அறிவித்தார். இது ஸ்டாலினை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. அ.தி.மு.க.  நலிந்து கிடக்கும் நிலையில், எளிதாக முதல்வராகிடலாம் என நினைத்தவருக்கு ரஜினியின் அரசியல் வருகை சுத்தமாக பிடிக்கவில்லை. 

கருணாநிதியிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு கிளம்பிய  ரஜினி போயஸ்கார்டன் சென்று கொண்டிருந்த போது ’எந்த ஆன்மிக அரசியலாலும் தமிழ் மண்ணில் திராவிட அரசியலை அசைக்க கூட முடியாது!’ என்று பேட்டி தட்டினார் ஸ்டாலின். இதற்கு தன் வீட்டு வாசலில் நிருபர்களிடம் வெகு அலட்சியமாக ‘நான் கோபாலபுரத்தில் ஸ்டாலினை பார்க்கவில்லை, பேசவுமில்லை.’ என்று  சொல்லி மூக்குடைத்தார் ரஜினி. 

இப்படியாக இருவருக்குள்ளும் உரசல் போய்க் கொண்டிருந்த நிலையில், சமீபத்தில் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கு ரஜினியை அழைத்தார் ஸ்டாலின். அவரும் சென்றார். சோனியா, ராகுல் போல் சிறப்பு வழியில் அவரை வர அனுமதிக்காமல் பொது வழியில் வர வைத்ததில் ரஜினி தரப்புக்கு ஸ்டாலின் மீது கடும் கோபம். மேலும் கம்பி தடுப்புகளுக்கு பின்னே அமர வைத்ததை அவமானமாகவே கருதினார் ரஜினி. அவரது கடுப்பு ஸ்டாலினுக்கும் நன்றாகவே தெரியும். 

சூழல் இப்படிப் போய்க் கொண்டிருந்த நிலையில்தான் சமீபத்தில் அழகிரிக்கு பிறந்தநாள் வாழ்த்தை மிக நுணுக்கமாக கூறியிருக்கிறார் ரஜினி. ‘நீங்கள் அரசியலில் எழுந்து வருவீர்கள்!’ என்று ரஜினி சொன்னது, ஸ்டாலினுக்கு எதிராக அழகிரியை கொம்பு சீவிய செயலாகவே அரசியல் பார்வையாளர்கள் பார்க்கின்றனர். ஸ்டாலின் மீதான தனது மனக்கஷ்டங்களை அழகிரி வழியே தெளிவாக தீர்த்துக் கொள்கிறார் ரஜினி என்று விமர்சனம் எழுகிறது. 

இச்சூழலில் ஸ்டாலினும் இந்த விஷயத்தில் ரஜினி மீது கடும் கோபத்தில் இருக்கிறார் என்கிறார்கள் அறிவாலய முக்கியஸ்தர்கள். ”அவருக்கு (ரஜினிக்கு) என்ன பிரச்னையாம்? பிறந்தநாள் வாழ்த்து சொல்றதுன்னா அதைமட்டும் சொல்ல வேண்டிதானே! அதென்ன, அரசியல்ல மீண்டும் வருவீங்கன்னு தூண்டி விடுற வேலையை செய்யுறாரு? நான் கோபப்பட்டு பார்க்கணுமா அவரு?’ என்று பொங்கியிருக்கிறார். 

அழகிரியை பாராட்டி தூண்டினால் ஸ்டாலினுக்கு எரிச்சலும், கோபமும் வருமென்பது ரஜினிக்கு தெரியும். அதனால்தான் அதை செய்கிறார், சொல்லப்போனால் கருணாநிதியின் குடும்பத்தினுள் நாரதர் வேலை பார்த்துக், களேபரத்தை கெளப்புகிறார் ரஜினி! என்று விமர்சனங்கள் வந்து விழுகின்றன. 

இப்படிப் போய்க் கொண்டிருக்கும் நிலையில், தனிக்கட்சி துவங்கும் ரஜினிக்கு ஆதரவாக போய் நிற்கலாமா? என்று அழகிரி யோசிப்பதாகவும், அழகிரியை ரஜினி வழியாக ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வுக்கு எதிராக பேச தூண்டிவிட்டு தேர்தலில் அதன் வாக்குகளை சிதறடிக்கலாமா என்று டெல்லி லாபி திட்டம் போடுவதாகவும் தகவல்கள் தடதடக்கின்றன. 
என்னா வில்லத்தனங்கள்!

click me!