மோடி இந்தியாவிற்கு பிரதமரா, இல்லை பாகிஸ்தானுக்கு தூதரா...?? சந்தேகம் கிளப்பிய வங்கத்து புலி மம்தா..!!

By Ezhilarasan BabuFirst Published Jan 4, 2020, 11:01 AM IST
Highlights

மோடி இந்தியாவின் பிரதமர் ஆனால் அவர் எப்போதும் பாகிஸ்தானை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார் அவர் என்ன பாகிஸ்தான் தூதரா.?  

பிரதமர் மோடி எப்போதும் பாகிஸ்தானைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்,  அவர் என்ன பாகிஸ்தானின் தூதரா என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார் .  மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற அவர் இவ்வாறு கூறியுள்ளார் ,  மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெற்றது 

அதில் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு தன் ஆதரவாளர்களுடன் பேரணி சென்றார் ,  அப்போது பேசிய அவர் தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது இச்சட்டத்தை எதிர்த்து நான் போராடி வருகிறேன் மக்கள் அனைவரும் என்னுடன் கைகோர்க்க வேண்டும் என்றார் ஜனநாயகம் அனைவருக்கும் பொதுவானது அதைக் காக்க அனைவரும் முன்வர வேண்டும்  என்றார் . 

மோடி இந்தியாவின் பிரதமர் ஆனால் அவர் எப்போதும் பாகிஸ்தானை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார் அவர் என்ன பாகிஸ்தான் தூதரா.?  அவர் பாகிஸ்தான் தூதரை போலத்தான் செயல்படுகிறார் நாம் அனைவரும் இந்தியர்கள் நமது நாட்டு விவகாரங்களை  நாம் பேசலாம் என பிரதமர் மோடியை அவர்  கடுமையாக சாடினார் . 

click me!