முன்னாள் சபாநாயகர் P.H பாண்டியன் மரணம்..!

Published : Jan 04, 2020, 10:24 AM ISTUpdated : Jan 04, 2020, 10:28 AM IST
முன்னாள் சபாநாயகர் P.H பாண்டியன் மரணம்..!

சுருக்கம்

முன்னாள் தமிழக சபாநாயகர் P.H பாண்டியன் இன்று காலை 8.00 மணிக்கு காலமானார்.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியைச் சேர்ந்தவர் P.H பாண்டியன். அதிமுக மூத்த தலைவரான இவர் தமிழக சபாநாயகராக 1985 ஆம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை செயல்பட்டார். 1999ம் ஆண்டு திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் இருந்து உறுப்பினராகவும் வெற்றி பெற்றார். 74 வயதான P.H பாண்டியன் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் அதிமுக கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது சொந்த ஊரில் நாளை இறுதிச்சடங்கு நடக்கும் என்று அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி