தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்க மாட்டேன்...!! அமித்ஷாவுக்கு சவால் விடும் மம்தா பானர்ஜி..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 21, 2019, 1:58 PM IST
Highlights

இந்நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை எனது அரசாங்கம் அனுமதிக்காது பலர் உள்நாட்டிலேயே அகதிகளாக் கப்படும் சுழல் உள்ளது ,  என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.  இந்த திட்டத்திற்கு முழுவதுமாக எதிரிப்பு தெரிவித்துள்ள அவர் மேற்கு வங்கத்தில் யாருடைய குடியுரிமையையும் யாராலும் பறிக்க முடியாது .  எனது அரசாங்கம் மக்களை வகுப்புவாத அடிப்படையில் பிடிக்காது என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை எனது அரசாங்கம் அனுமதிக்காது என அமித்ஷாவுக்கு சவால் விடும் வகையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிரடியாக தெரிவித்துள்ளார் .  தேசிய குடிமக்கள் பதிவேடு சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் சூழலுலை ஏற்படுத்தும் என அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.  வடகிழக்கு மாநிலமான அசாமில் அண்டை நாடான வங்காள தேசத்தை சேர்ந்த பலர் சட்ட விரோதமாக குடியேறி இந்திய அரசின் வாக்குரிமை உள்ளிட்ட பல சலுகைகளை அனுபவித்து வருவதாக மத்திய அரசு கூறி வருகிறது.  இதையடுத்து இங்கு சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டவர்களை அடையாளம் காண்பதற்காக தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்க மத்திய உள் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 

ஆனால் அதில் உள்ள குளறுபடிகள் காரணமாக பல இந்தியர்கள் அவர்களது குடும்பத்தில் அடையாளத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  அசாமில் சுமார் 19 லட்சத்திற்கு மேற்பட்டோரின் பெயர்கள் அந்த பட்டியலில் விடுபட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .  இந்நிலையில் தேசிய குடியுரிமை பதிவேடு நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.  ஆனால் தேசிய மக்கள் பதிவேட்டை எனது அரசாங்கம் அனுமதிக்காது என உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எச்சரிக்கைவிடும் வகையில்  மேற்கு வங்க முதலமைச்சர், மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.  இது குறித்து மாநிலங்களவையில் பேசிய அமைச்சர்  என்ஆர்சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும்,  அதில் மதத்தைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை,  மதங்களுக்கு அப்பாற்பட்டு தேசிய குடிமக்கள் பதிவேடு நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும்.  அனைவரும் தாம் இந்தியர் என்பதை குடியுரிமை ஆவணங்களுடன் நிரூபிக்க வேண்டும்.  அப்படி ஆவணங்களை தாக்கல் செய்யாதவர்கள் இந்தியர்கள் அல்லாதவர்கள் என கருதப்படுவர். 

அவர்கள் முகாமுக்கு அனுப்பப்படுவார்கள் என தெரிவித்தார். இந்நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை எனது அரசாங்கம் அனுமதிக்காது பலர் உள்நாட்டிலேயே அகதிகளாக் கப்படும் சுழல் உள்ளது ,  என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.  இந்த திட்டத்திற்கு முழுவதுமாக எதிரிப்பு தெரிவித்துள்ள அவர் மேற்கு வங்கத்தில் யாருடைய குடியுரிமையையும் யாராலும் பறிக்க முடியாது .  எனது அரசாங்கம் மக்களை வகுப்புவாத அடிப்படையில் பிடிக்காது என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

click me!