திருமாவளவனை இந்து மதத்திலிருந்து ஒதுக்கி வைக்க சடங்கு... விழாவுக்கு அதிரடி ஏற்பாடு..!

Published : Nov 21, 2019, 01:24 PM IST
திருமாவளவனை இந்து மதத்திலிருந்து ஒதுக்கி வைக்க சடங்கு...  விழாவுக்கு அதிரடி ஏற்பாடு..!

சுருக்கம்

இந்து சமயத்தில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைவிலக்கி வைக்கும் சடங்கை இந்து மக்கள் கட்சி நடத்த உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இந்து சமயத்தில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைவிலக்கி வைக்கும் சடங்கை இந்து மக்கள் கட்சி நடத்த உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது கோயில் என இந்து கோயில்களையும், இந்து மதத்தினரையும் திருமாவளவன் தாக்கிப்பேசியது சர்ச்சையானது. இந்நிலையில், இந்து மக்கள் கட்சி, திருமாவளவனை இந்து சமயத்தில் இருந்து விலக்கி வைக்கும் சடங்கை வரும் 26ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள உலகலந்த பெருமாள் கோவிலில் இந்த சடங்கை நடத்த உள்ளதாக பத்திரிக்கை அடித்து விநியோகித்து வருகிறார்கள். 

இந்து மக்கள் கட்சியை சேர்ந்த அர்ஜூன் சம்பத் தலைமையில் நடக்கும் இந்த விழாவில் மடாதிபதிகள், துறவி பெருமக்கள், சிவனடியார்கள், வைணவ பெருமக்கள், இந்து சமய ஆர்வலர்கள் கலந்து கொண்டு சம்பிரதாய சடங்குகள் மூலம் திருமாவளவனை இந்து சமயத்தில் இருந்து விலக்கி வைக்க உள்ளதாக அந்தப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!