அதிமுகவை போல திமுக நடந்துகொள்ளுமா..? ஸ்டாலினின் பதிலுக்காக காத்திருக்கும் உடன்பிறப்புகள்..!

By vinoth kumarFirst Published Nov 21, 2019, 12:57 PM IST
Highlights

மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் என தமிழக அரசு அரசாணையை வெளியிட்டதையடுத்து அதிமுக தலைமை விருப்பமனு அளித்தவர்கள் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளும் படி அறிவித்துள்ளது. ஆனால், திமுக தலைமை இதுபோல அறிவிப்பை வெளியிடுமோ என்ற ஏக்கத்தில் நிர்வாகிகள் வழிமேல் விழி வைத்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் என தமிழக அரசு அரசாணையை வெளியிட்டதையடுத்து அதிமுக தலைமை விருப்பமனு அளித்தவர்கள் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளும் படி அறிவித்துள்ளது. ஆனால், திமுக தலைமை இதுபோல அறிவிப்பை வெளியிடுமோ என்ற ஏக்கத்தில் நிர்வாகிகள் வழிமேல் விழி வைத்து காத்துக்கொண்டிருக்கின்றனர். 

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் வரும் டிசம்பர் 2-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியாகும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. அதன்படி, கடந்த 14-ம் தேதி திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. 

அதிமுகவில் மாநகராட்சி மேயர் பதவிக்கு ரூ.25,000, மாநகராட்சி மாமன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.5,000, நகர மன்ற தலைவர் பதவிக்கு ரூ.10,000 விருப்ப மனு கட்டணம் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல், திமுக தரப்பில் மாநகராட்சி மேயர் பதவி ரூ.50,000, மாமன்ற உறுப்பினர் பதவிக்கு ரூ.10,000, நகர்மன்றத் தலைவர் பதவிக்கு ரூ.25,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இது அதிமுகவை விட இருமடங்கு கட்டணத்தை திமுக தலைமை நிர்ணயித்தது.

இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளின் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவது தொடர்பாக தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. இதன்மூலம், இந்த பதவிகளுக்கு இனி நேரடி தேர்தல் இல்லை என்று உறுதியாவிட்டது. ஆகையால், அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள் தாங்கள் செலுத்திய கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

ஆனால், அதிமுகவை விட இருமடங்கு கட்டணத்தை  நிர்ணயித்த திமுக தலைமை கட்டணத்தை திரும்ப தருவது தொடர்பாக இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. விருப்ப மனு கட்டிய பணம் திரும்ப கிடைக்குமா? கிடைக்காத என்ற ஏக்கத்தில் பணம் கட்டிய திமுக நிர்வாகிகள் இருந்து வருகின்றனர். 

click me!