ஆக்சிஜன், ரெம்டிசிவர் மருந்துகள் பிறமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதா? அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு

By Ezhilarasan BabuFirst Published Apr 22, 2021, 12:29 PM IST
Highlights

தமிழக அரசின் அனுமதி பெறாமல் வெளி மாநிலங்களுக்கு அனுப்படுவதாகவும், வெண்டிலேட்டர் பற்றாக்குறை உள்ளதாகவும் தமிழ் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது.

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும்  ஆக்சிஜன் மற்றும் ரெம்டிசிவர் மருந்துகள் பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக பிற்பகல் விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை மிக தீவிரமாக உள்ள நிலையில் குஜராத் போன்ற மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், தமிழகத்தில் ரெம்டிசிவர் மருந்துகள் தனி நபர்களுக்கு வழங்கப்படுவதாகவும், ஆக்சிஜன் உற்பத்தி போதுமான அளவிற்கு உள்ள நிலையில், அதனை தமிழக அரசின் அனுமதி பெறாமல் வெளி மாநிலங்களுக்கு அனுப்படுவதாகவும், வெண்டிலேட்டர் பற்றாக்குறை உள்ளதாகவும் தமிழ் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது. 

இந்த செய்தியை அடிப்படையாக கொண்டு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து பொது நல வழக்காக விசாரணைக்கு எடுத்தது. தமிழகத்தில் ஆக்சிஜன் மற்றும் ரெம்டிசிவர் மருந்துகள் பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக இன்று காலை கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, மற்ற மாநிலங்களில் உள்ள நிலை தமிழகத்துக்கும் ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே தற்போதைய நிலை குறித்து அறிய விரும்புவதாக தெரிவித்தார். மேலும், தற்போதைய சூழலில் மேலும் குழப்பம் ஏற்படுத்துவதற்காக இந்த வழக்கை தாமாக முன் வந்து எடுக்கவில்லை எனவும் நீதிபதி தெளிவு படுத்தினர். 

மேலும், இந்த வழக்கு குறித்து தமிழக அரசிடம் விளக்கம் பெற்று, இன்று பிற்பகல் தெரிவிக்கும்படி அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம்  நீதிபதிகள் அறிவுறுத்தினர். ரெம்டிவைசர் தனி நபர்களுக்கு வழங்கப்படுவதாகவும், ஆக்சிஜன் உற்பத்தி போதுமான அளவிற்கு உள்ளபோதும் வெளி மாநிலங்களுக்கு அனுப்படுவதாகவும், வெண்டிலேட்டர் பற்றாக்குறை உள்ளது எனவும் (இந்து தமிழ் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது). அந்த செய்தியை அடிப்படையாக வைத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது குறிப்பிடதக்கது. 
 

click me!