விஜயின் அரசியல் பிரவேசத்தை வரவேற்கிறோம்! ஆனால் சினிமா புகழ் வெற்றியை தராது! - ஹெச் ராஜா கருத்து!

Published : Jun 19, 2023, 01:10 PM ISTUpdated : Jun 19, 2023, 03:01 PM IST
விஜயின் அரசியல் பிரவேசத்தை வரவேற்கிறோம்! ஆனால் சினிமா புகழ் வெற்றியை தராது! - ஹெச் ராஜா கருத்து!

சுருக்கம்

விஜயின் அரசியல் பிரவேசத்தை வரவேற்கிறோம்! ஆனால் சினிமாவில் இருப்பதால் வெற்றி பெறலாம் என சொல்ல முடியாது என கோவையில் எச் ராஜா தெரிவித்துள்ளார்.  

கோவை ராம் நகர் பகுதியில் உள்ள அரங்கில் பாஜகவின் மூத்த உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஹெச் ராஜா கலந்துகொண்டார்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.

தமிழகத்தில்.சட்டத்திற்கு உட்பட்ட ஆட்சி நடைபெறுகிறதா என்ற கேள்வி எழுகிறது என்றார். ஜனநாயக விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது என குற்றம்சாட்டினார். ஆட்சிக்கு வந்தால் செந்தில் பாலாஜியை ஜெயிலில் வைப்பேன் என தெரிவித்த ஸ்டாலின் வருத்தப்படுகிறார். அவர் மகிழ்ச்சியாக தான் இருக்க வேண்டும் என்றார்.

எமர்ஜென்சி காலத்தில் ஒன்றரை வருஷத்திற்கு கட்சி வேட்டி கட்டாதவர்கள் திமுகவினர். சட்டத்திற்குட்பட்ட ஆட்சியில்லை என்று தெரிவித்த ஹெச் ராஜா, முதல்வர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கையாக ஆலோசனையாக சொல்கிறேன் எனக் கூறி, பாஜகவை சீண்ட வேண்டாம் சீண்டினால் அதற்கான பலன் அனுபவித்துக் கொண்டிருக்கிறது இன்னும் அதிகமாகும் என்றார்.



விஜயின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்வி பதலளித்த ஹெச் ராஜா, அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் சினிமாவில் தான் இருப்பதனால் வெற்றி பெறலாம் என சொல்ல முடியாது. நடிப்பிற்கு சிவாஜியை போல் பிறந்து வர வேண்டும் ஆனால் அரசியலில் சிவாஜியால் வெற்றிப்பெற முடியவில்லை. டி.ராஜேந்திரன், பாக்கியராஜ் ஆகியோரால் வெற்றிப்பெற முடியவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் நீண்ட நாட்கள் அரசியலில் இருந்தவர்கள்.விஜயின் அரசியல் பிரவேசத்தை வரவேற்கிறோம் என்றார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தவெகவில் இணையப்போகிறேனா..? ஷாக் அப்டேட் கொடுத்த வைத்திலிங்கம்- அதிமுக டாக்டர் சரவணன்..!
ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது..! தம்பிதுரை மீண்டும் திட்டவட்டம்..!