எவ்வளவு சொல்லியும் கேட்காத திருமணமண்டபங்கள்.. 30 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Jun 25, 2021, 9:05 AM IST
Highlights

சென்னை எழும்பூரில் கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத திருமண மண்டபத்திற்கு 30 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சென்னை எழும்பூரில் கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத திருமண மண்டபத்திற்கு 30 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்களும் , தனியார் நிறுவனங்களும் பாதுகாப்பு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. 

மேலும், தனியார்  மண்டபங்களில் திருமணம் உட்பட நிகழ்ச்சிகள் நடத்தும் முன்னர் மாநகராட்சியிடம் பதிவு செய்து அனுமதி பெற வேண்டும் எனவும் உத்தரவிட்டு , கண்காணிக்கப்படுகிறது. இந்த நிலையில், திருமண மண்டபங்களில் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொள்ளும் மண்டல அதிகாரிகள், தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்காதது, முகக்கவசம் அணியாதது உட்பட பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத மண்டபங்களுக்கு அபராதமும் விதிக்கின்றனர். இவ்வாறு சென்னை எழும்பூரில் உள்ள மண்டபத்திற்கு 30ஆயிரம் ரூபாய் அபராதமாக விதித்துள்ளனர். 

மேலும் இதுவரை மொத்தம் ஏழு திருமண மண்டபங்களுக்கு அபராதம் விதித்துள்ளதாகவும், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா பெருந்தொற்று பாதுகாப்பு விதிகள் நடைமுறைக்கு வந்த நாள் முதல், சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் பொதுஇடங்களில்  விதிகளை பின்பற்றாத தனிநபர்கள், உணவகங்கள், மளிகை கடைகள், இறைச்சி கூடங்கள், நிறுவனங்களிடம் இருந்து இதுவரை 6.38 கோடி ரூபாய் அபராதமாக சென்னை மாநகராட்சி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

click me!