
திரை மறைவில் இருந்து ஆட்டிப்படைத்தவர்கள், பலர் வெளி உலகத்திற்கு வந்து செயலற்று போய்விடுகிறார்கள்.
ஏனெனில், திரை மறைவு சகுனி தனத்திற்கு, மக்கள் ஆதரவு தேவை இல்லை. ஆனால், வெளிப்படையான அதிகாரம் பெற மக்கள் ஆதரவு கண்டிப்பாக தேவை.
அந்த வகையில், திரை மறைவில் இருந்து கொடிகட்டிப்பறந்த, தினகரன், மக்கள் செல்வாக்குடன் பதவியில் அமரவே, ஆர்.கே.நகரில் களமிறங்கி உள்ளார்.
அவர் என்னவோ, பாதுகாப்புடன்தான் வாக்கு சேகரித்து வருகிறார். ஆனாலும் ஆங்காங்கே, பெண்கள் வளைத்துக் கொண்டு கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திரும்பவும் வேண்டியுள்ளது.
ஆனால் அவருக்கு, ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போன சி.ஆர்.சரஸ்வதி, தொகுதி பெண்களிடம் வாங்கிய தக்காளி அடியை பார்த்து, மற்ற பேச்சாளர்கள் ஆர்.கே.நகர் என்றாலே, அலறி அடித்து ஓடுகின்றனர்.
இது போதாதென்று, சின்னத்திரையிலும், சினிமாவிலும் அவ்வப்போது, சில ரோல்களில் தலை காட்டும், மோனிகா கூட தினகரனை கலாய்த்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட ஆரம்பித்து விட்டார்.
சன் டி.வி யில் செய்திக்கு இடையே சில நிமிடங்கள் வரும், வானிலை அறிக்கை வாசிக்க வந்து, மெல்ல, மெல்ல சின்ன திரையிலும், சினிமாவிலிம் சின்ன, சின்ன ரோல்களில் நடிக்க ஆரம்பித்தார்.
ஆனாலும் சமூக அக்கறை மற்றும் அரசியல் ஆர்வம் காரணமாக, அவ்வப்போது இதுபோன்ற பரபரப்பு வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
தற்போது, அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஆர்கே நகர் தேர்தலில் தினகரனின் தேர்தல் அறிக்கையயும், மத்திய அரசு விவசாயிகளை புறக்கணித்து வருவதையும் கடுமையாக சாடியுள்ளார்.
அதில் ஆர்கே நகர் தேர்தலில் 57000 வீடுகள் கட்டப்படும் என டிடிவி தினகரன் வாக்குறுதி அளித்துள்ளார்.
ஆர்கே நகரில் மொத்த வாக்காளர்களே 3 லட்சம் தான் ஒரு வீட்டுக்கு 3 ஓட்டுகள் என்றாலும் இவர் மொத்த ஆர்கே நகருக்கு வீடு கட்டிக்கொடுக்க உள்ளாரா.
அப்படியென்றால், அதற்கான செலவும் மத்திய அரசு, தமிழக அரசுக்கு கொடுப்பதாக அறிவித்த வரட்சி நிவாரண நிதியை விட அதிகம் எனவும் சாடியுள்ளார்.
தமிழகத்தின் கடன் சுமை கடந்த காலங்களை விட மிகவும் மோசமாக உள்ளது எனவும் மோனிகா குறிப்பிட்டார்.
இதை எல்லாம் பார்த்து என்னே ... தினகரனுக்கு வந்த சோதனை என்று அதிமுகவினர் தலையில் அடித்துக் கொள்கின்றனர்.