அதிமுக கட்சி அலுவலகம் தொடர்பாக ஐ.நா. சபைக்கே சென்றாலும் நாங்கதான் (இபிஎஸ் தரப்பு) வெற்றி பெறும் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு கடந்த 11- ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்றி, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட இருந்த நிலையில், ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு தன்னுடைய ஆதரவாளர்களுடன் வந்தார் முன்னாள் முதல்வரான ஓ. பன்னீர்செல்வம். இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மோதல் கலவரமானது. கட்சி அலுவலகத்தை உடைத்து கொண்டு சென்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ஆவணங்களை அள்ளிச் சென்றனர்.
மேலும் வாசிக்க: ஆட்சி மாறட்டும்.. தமிழ்நாடு தினம் திரும்பவும் மாறிடும்.. திமுக அரசுக்கு வானதி சீனிவாசனின் அட்வைஸ்.!
இந்தக் கலவரத்தையடுத்து கட்சி அலுவலகத்துக்கு வருவாய் கோட்ட அதிகாரி ‛சீல்' வைத்து உத்தரவிட்டார். அரசின் இந்த உத்தரவை எதிர்த்து இபிஎஸ் - ஓபிஎஸ் என இரு தரப்பும் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகின. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டது. மேலும் அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால், அதே வேளையில் ஒரு மாதத்துக்கு கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் யாரையும் அலுவலகத்துக்கு அனுமதிக்கக் கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் வாசிக்க: அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும்...! நீதிமன்ற உத்தரவால் ஓபிஎஸ் ஷாக்
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இபிஎஸ் தரப்புக்கு தெம்பை அளித்துள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இந்நிலையில் இந்தத் தீர்ப்பு தொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். “பொதுக்குழு உறுப்பினர்களின் பலமோ, நிர்வாகிகளின் பலமோ எதுவும் இல்லாமல் பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் உள்நோக்கத்தோடு நடந்துகொண்டால் கண்டிப்பாக அதிமுகவின் எந்தத் தொண்டரும் மன்னிக்க மாட்டார்கள். கட்சியில் உள்ள 95 சதவீத பொதுக்குழு உறுப்பினர்களும் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமியே இருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். இந்த விஷயத்தில் ஐ.நா. சபைக்கே சென்றாலும் நாங்கள்தான் (இபிஎஸ் தரப்பு) கண்டிப்பாக வெற்றி பெறுவோம்” என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும் வாசிக்க: எதிர்க்கட்சித் துணை தலைவர் பதவி.. ஓபிஎஸ் இடத்தில் ஆர்.பி. உதயகுமார்.. எடப்பாடி பழனிச்சாமியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்