ஆட்சி மாறட்டும்.. தமிழ்நாடு தினம் திரும்பவும் மாறிடும்.. திமுக அரசுக்கு வானதி சீனிவாசனின் அட்வைஸ்.!

By Asianet TamilFirst Published Jul 20, 2022, 9:34 PM IST
Highlights

தமிழ்நாடு தினத்தை திமுக அரசு மாற்றினால், ஆட்சி மாறும்போது மீண்டும் மாறும் என பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மொழி வாரியாக மா நிலங்கள் பிரிந்த நவம்பர் 1-ஆம் தேதியை மாநில நாளாக ஆந்திரா, கர் நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கொண்டாடுகின்றன. அந்த வகையில் கடந்த அதிமுக ஆட்சியிலும் நவம்பர் 1-ஆம் தேதி தமிழ்நாடு தினமாகக் கொண்டாடப்படும் என்று அன்றைய முதல்வர் இபிஎஸ் கடந்த 2020-ஆம் ஆண்டில் அறிவித்தார். அரசு அறிவித்தப்படி அந்த ஆண்டு தமிழக தினம் நவம்பர் 1 ஒன்று கொண்டாடப்பட்டது. கடந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாடு தினம் ஜூலை 18 அன்று இனி கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு என்ற பெயரை சூட்ட  ஜூலை 18 அன்று கொண்டு வரப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளையே அத்தினமாகக் கொண்டாடுவது சரியாக இருக்கும் என்றும் ஸ்டாலின் விளக்கம் அளித்திருந்தார்.

மேலும் வாசிக்க: 100 யூனிட் இலவசம் வேண்டாமா.? இந்த படிவத்தை பூர்த்தி பண்ணுங்க.. செந்தில் பாலாஜி அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

இந்நிலையில் கடந்த ஜூலை 18 அன்று தமிழ்நாடு தினம் தமிழக அரசின் சார்பில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலினும் பங்கேற்றிருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் தொடர்பாக வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு உருவான தினம் நவம்பர் 1-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும், ஜூலை 18-ஆம் தேதியை தமிழ்நாடு தினமாக கொண்டாடி வருகிறது. இதனால், தமிழக மக்களுக்கு தேவையற்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. 1967 ஜூலை 18-ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு என பெயர் மாற்றத் தீர்மானம், 1968 நவம்பர் 23-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1969 ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாளில்தான் தமிழ்நாடு என்ற பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மேலும் வாசிக்க: எதிர்க்கட்சித் துணை தலைவர் பதவி.. ஓபிஎஸ் இடத்தில் ஆர்.பி. உதயகுமார்.. எடப்பாடி பழனிச்சாமியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்

1956 நவம்பர் 1-ஆம் தேதி உருவான சென்னை மாகாணம்தான் இன்றைய தமிழ்நாடு. அதே நாளில்தான் கர்நாடகம், ஆந்திரம், கேரளம் தனி மாநிலங்களாகப் பிரிந்தது. எனவேதான், இந்த மாநிலங்கள் நவம்பர் 1-ஆம் தேதியை தங்களது மாநில தினமாக கொண்டாடி வருகின்றன. குழந்தை பிறந்த தினத்தைத்தான், பிறந்த நாளாக கொண்டாடுகிறோம். குழந்தைக்குப் பெயர் வைத்த நாளை உலகில் யாரும் கொண்டாடுவதில்லை. தமிழ்நாடு தினத்தை திமுக அரசு மாற்றினால், ஆட்சி மாறும்போது மீண்டும் மாறும். அதனால் தேவையற்ற குழப்பம்தான் மிஞ்சும். இந்திய நாட்டின் பிரிக்க முடியாத அங்கமான தமிழகத்தின் வளர்ச்சிக்கு உழைக்க நவம்பர் 1 தமிழ்நாடு தினம், ஜூலை 18 தமிழ்நாடு தீர்மான நாள் என இரு நாட்களிலும் உறுதியேற்போம்" என்று வானதி சீனிவாசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க: நாளைக்கே தேர்தல் வைக்கட்டும்.!திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலை விட்டே விலகுகிறோம்.?செல்லூர்ராஜூ தடாலடி

click me!