அதிமுகவை மீட்டெடுப்போம்.. டிடிவி தினகரனை முதல்வராக அரியணையில் அமர வைப்போம்.. அமமுக தீர்மானம்.

Published : Feb 25, 2021, 11:38 AM IST
அதிமுகவை மீட்டெடுப்போம்.. டிடிவி தினகரனை முதல்வராக அரியணையில் அமர வைப்போம்.. அமமுக தீர்மானம்.

சுருக்கம்

இந்நிலையில் அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக அதிமுகவை மீட்டெடுப்போம்,  டிடிவி தினகரனை முதல்வராக அரியணையில் அமர வைப்போம் என அமமுக செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அதிமுகவை மீட்டெடுப்போம் டிடிவி தினகரனை முதல்வராக அரியணையில் அமர வைப்போம் என அமமுக செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அ.ம.மு.க, பொது குழு மற்றும் செயற்குழு கூட்டம் கட்சியின் துணைத் தலைவர் அன்பழகன் தலைமையில் காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்று வருகிறது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் பங்கேற்று உள்ளார். அதேபோல் மொத்தம் 10 இடங்களில் காணொளி காட்சி மூலம் இந்த செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. 

எதிர் வரக்கூடிய சட்டமன்ற பொதுத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எவ்வாறாக செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்படுவதாகவும, மேலும் தேர்தலுக்கான கூட்டணி அதிகாரம் பொதுச் செயலாளருக்கு வழங்கப்படும், எந்த இடங்களில் அ.ம.மு.கவுக்கு சாதமாக உள்ளது, கூட்டணிக்கு யார் யார் வருவார்கள் குறித்து பேசப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் அதில்  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக அதிமுகவை மீட்டெடுப்போம்,  டிடிவி தினகரனை முதல்வராக அரியணையில் அமர வைப்போம் என அமமுக செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல் சசிகலா விடுதலக்கு பின்னர் நடைபெறும் செயற்குழு பொதுக்குழு கூட்டம் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இது பார்க்கப்படுகிறது. 
 

PREV
click me!

Recommended Stories

திரும்பத் திரும்ப அவமானம்..! பாஜக சவகாசமே வேண்டாம்..! ஓ.பி.எஸ் எடுத்த அதிரடி முடிவு..!
உங்கள் மிரட்டலுக்கு திமுக தலைமை அல்ல... தொண்டன் கூட பயப்பட மாட்டான்..! துணைக்கு கூட்டம் சேர்க்கும் உதயநிதி