எடப்பாடி ஆட்சியை கவிழ்க்க மாட்டோம்... உத்தரவாதம் கொடுத்த மு.க.ஸ்டாலின்..!

By Thiraviaraj RMFirst Published May 29, 2019, 12:27 PM IST
Highlights

ஆட்சிக்கவிழ்ப்பிலும், கலைப்பிலும் மு.க.ஸ்டாலின் ஒருபோதும் ஆர்வம் காட்ட மாட்டார். ஏனென்றால் மிகப்பெரிய ஜனநாயகவாதியான கலைஞரின் அச்சுப்பிசகாத நகல் அல்லவா அவர். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதால் ராஜபாட்டைக்காக காத்திருப்பாரே தவிர, குறுக்கு வழிக்காக அவசரம் காட்ட மாட்டார். 

ஆதரவை இழந்த அதிமுக ஆட்சி தொடரலாமா? என்கிற தலைப்பில் திமுக நாளேடான முரசொலி நாளிதழில் தலையங்கம் பகுதில் அதிமுக ஆட்சியை கலைப்பது தொடர்பான கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில், தமிழகத்தில் இப்போது நடைபெறும் ஓ.பி.எஸ் -ஈபிஎஸ் தலைமையிலான அதிமுக ஆட்சி பெரும்பான்மை வலிமையுடன் நடைபெறுகிறதா? நாட்டு மக்களின் நம்பிக்கையுடன் நடைபெறுகிறதா? என்றால் இல்லை என்று தான் நடுநிலைமையாளர்கள் உள்ளிட்ட அரசியல் நோக்கர்கள் விடை அளிப்பார்கள்.

2100 சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளில் அதிமுக 38.4 சதவிகித வாக்குகளை பெற்றது. 21014 நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளில் அதிமுக 44.3 சதவிகித வாக்குகளை பெற்றது. 2106 சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளில் 41 சதவிகித வாக்குகளை பெற்றது. 134 உறுப்பினர்களுடன் மீண்டும் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்தது. 

அதே சட்டப்பேரவை தேர்தலில் திமுக 40 சதவிகித வாக்குகளை பெற்றது. திமுகவுக்கு 89 உறுப்பினர்கள். தமிழகசட்டமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு திமுக பலம் வாய்ந்த எதிர்கட்சியாக உருவெடுத்தது. அந்த தேர்தலில் அதிமுகவும், திமுகவும் இருந்த வாக்கு வித்தியாசம் ஒரு சதவிகிதம் தான். 2019 மக்களவை தேர்தலில் அதிமுக பெற்ற வாக்கு சதவிகிதம் 18.5. ஒரே தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது அதிமுக. 

திமுக 32.8 சதவிகித வாக்குக்களை பெற்றிருக்கிறது. மு.க.ஸ்டாலின் தலைவராகி அவர் முன்னின்று நடத்திய முதல் தேர்தலில் ஈட்டியிருக்கும் முத்தான வெற்றி அது. அதிமுகவை பொறுத்தவரை அதன் ஆதரவு தளம் 2011 முதல் இந்த எட்டு ஆண்டுகளில் 44,3 சதவிகித வாக்குகளில் இருந்து 18.5 சதவிகிதமாகக் குறைந்து சுருங்கி விட்டது. 

ஆல்க 22.5 சதவிகித வாக்காளர்களில் ஆதரவை அதிமுக இழந்து இருக்கிறது. எடப்பாடி அதிமுக ஆட்சியில் ஊழல் கறைபடியாத அமைச்சர்களே இல்லை.  அதிமுகவிலிருந்து ஒரு கோஷ்டியினர் பிரிந்து அதன் தொடர்ச்சியாக 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது முதல் அதன் மைனாரிட்டி ஆட்சிதான் நடைபெறுகிறது. எடப்பாடி அதிமுக பாஜகவின் பினாமி என்பதால் முட்டுக்கொடுத்துக் கொண்டு இருக்கிறது. இப்போது நடந்த இடைத்தேர்தலிலும் 9 தொகுதிகளை மட்டுமே அதிமுகவால் மீட்க முடிந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு 13 தொகுதிகளை எதிர்கட்சியிடம் இழந்து இருக்கிறது. சட்டமன்றத்திற்குள்ளும் அதிமுகவுக்கு பெரும்பான்மை இல்லை. நாட்டு மக்களிடமும் செல்வாக்கை இழந்துவிட்டது. அதற்கு 2019 தேர்தல் முடிவுகளே காரணம்.  எனவே மக்களாட்சி மான்புகள் காப்பாற்றப்பட வேண்டுமானால் எடப்பாடி ஆட்சி தானாகவே முன் வந்து உடனடியாக ராஜினாம செய்துவிட்டு பதவியை விட்டு கீழே இறங்க வேண்டும். 

திமுகவை பொறுத்தவரை அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வருவதில் ஒருபோதும் நாட்டம் கொள்ளமாட்டார். எம்.ஜி.ஆர் கருணாநிதி ஆட்சியை கலைக்க திடர்ந்து முயற்சி செய்ததைப்போன்றோ, அல்லது ஜெயலலிதா அவர்கள் முதலில் ஜானகி ஆட்சியை சிதைக்கவும், பின்னர் கலைஞர் ஆட்சியை கவிழ்க்கவும் அவசரப்பட்டதை போன்றோ ஆட்சிக்கவிழ்ப்பிலும், கலைப்பிலும் மு.க.ஸ்டாலின் ஒருபோதும் ஆர்வம் காட்ட மாட்டார். ஏனென்றால் மிகப்பெரிய ஜனநாயகவாதியான கலைஞரின் அச்சுப்பிசகாத நகல் அல்லவா அவர். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதால் ராஜபாட்டைக்காக காத்திருப்பாரே தவிர, குறுக்கு வழிக்காக அவசரம் காட்ட மாட்டார். 

click me!