உங்கள் அச்சுறுத்தலுக்கு எல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்.. ஸ்டாலினுக்கு ஜர்க் காட்டும் ஜெயக்குமார் மகன்.

Published : Feb 26, 2022, 06:04 PM IST
உங்கள் அச்சுறுத்தலுக்கு எல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்.. ஸ்டாலினுக்கு ஜர்க் காட்டும் ஜெயக்குமார் மகன்.

சுருக்கம்

பொய் வழக்குகள் அனைத்தையும் நீதிமன்றம் மூலம் வெல்லுவோம்,திமுக ஆட்சி அமைத்தது முதல் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போட்டு அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டும் என செயல்பட்டு வருகின்றனர்

திமுக ஆட்சி அமைத்தது முதல் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போட்டு அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டும் என செயல்பட்டு வருகின்றனர் இதற்கெல்லாம் அதிமுகவினர் பயப்பட மாட்டோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் தெரிவித்துள்ளார். சென்னை பட்டினபாகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்மான ஜெயவர்தன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் திமுக பாசிஸ அரசாங்கம் எதிர்கட்சி குரல்களை நசுக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர் என் தந்தைக்கு ஏற்கனவே ஒரு வழக்கில் ஜாமீன் வாங்கி உள்ளோம்,மேலும் உள்ள ஒரு வழக்கில் நிச்சயம் ஜாமீன் வாங்குவோம், இந்த நிலையில்தான் நில மோசடி என புதிய வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது முழுக்க முழுக்க ஒரு குடும்ப பிரச்சனை, கடந்த 10 ஆண்டுகளாக சொத்து பிரிப்பதில் அண்ணன் தம்பி இருவரிடையே பிரச்சினை நடந்து வருகிறது, இதில் நான் தலையிட மாட்டேன் என என் தந்தை ஏற்கனவே தெரிவித்து விட்டார். இருந்த போதும் இதுகுறித்த புகாரை என் அக்கா கணவரின் சகோதரர் மகேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்து இருந்தார் மனுவை விசாரித்த நீதிபதி இது ஒரு குடும்ப பிரச்சனை இதில் எந்த ஒரு முறைகேடுகளும் நடைபெறவில்லை என தெரிவித்து சொத்தை பிரிப்பதற்காக ஒரு அதிகாரியை நியமனம் செய்து இருந்தார். என் அக்காவின் கணவர் நவீன் குமார் மற்றும் அவரின் சகோதரர் மகேஷ் இருவரிடமும் அந்த அதிகாரி 10 முறை பேச்சு வார்த்தை நடத்தியும் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால் இந்த வழக்கு தற்போது சிவில் நீதிமன்றத்தில் நடைபெறும் நிலையில் திமுகவின் தூண்டுதல் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

பொய் வழக்குகள் அனைத்தையும் நீதிமன்றம் மூலம் வெல்லுவோம்,திமுக ஆட்சி அமைத்தது முதல் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போட்டு அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டும் என செயல்பட்டு வருகின்றனர் இதற்கெல்லாம் அதிமுகவினர் பயப்பட மாட்டோம் என தெரிவித்தார்.நரேஷ் என்பவர் ஆயுதங்களுடன் அந்த பகுதிக்கு வந்த காணொலி உள்ளது,அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவருக்காக நாடாளுமன்ற உறுப்பினர் வாதாடி வருகின்றனர் என தெரிவித்த அவர் நரேஷ்குமாருக்கு முதல்வர் ஆசீர்வாதம் உள்ளதால் அவர் வெளியே சுற்றி வருகிறார் என தெரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

வாரிசு அரசியல் + ஊழல்.. திமுக அரசை விளாசித் தள்ளிய அமித்ஷா.. டிடிவிக்கு வெல்கம்!
விஜயின் கிறிஸ்தவ வாக்குகளில் வேட்டு வைத்த ஸ்டாலின்..! திமுகவின் அதிரடி வியூகம்..!