அதிக மேயர், துணை மேயர் பதவிகளை கேட்போம்.. அடித்துக் கூறிய அழகிரி.. ஆடிப்போன ஸ்டாலின்.

Published : Feb 26, 2022, 03:17 PM ISTUpdated : Feb 26, 2022, 03:22 PM IST
அதிக மேயர், துணை மேயர் பதவிகளை கேட்போம்.. அடித்துக் கூறிய அழகிரி.. ஆடிப்போன ஸ்டாலின்.

சுருக்கம்

எல்லோர் முன்னிலையிலும் இரு தரப்பினரும் மாறி மாறி தகாத வார்த்தையால் திட்டி சண்டையிட்டனர். இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி வெளியில் அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஓய்ந்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் திமுகவிடம் அதிக இடங்களில் மேயர் பதவிகள் கேட்க இருப்பதாக கூறினார். 

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் திடீர் கோஷ்டி மோதல் ஏற்பட்டதால் காங்கிரஸ் கமிட்ட அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியாவுக்கே சுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சி, பழம்பெரும் கட்சி என பல புகழ்கள் காங்கிரஸ் கட்சிக்கு இருந்தாலும், இரண்டாவது 5 ஆண்டாகவும் நாட்டை  பாஜகவுக்கு ஆள கொடுத்து விட்டு வெறுங்கையுடன் நிற்கிறது காங்கிரஸ். எந்த கட்சியிலும் இல்லாத அளவுக்கு இந்த கட்சியில் உள்ள போட்டி, பொறாமை, கோஷ்டி மோதல்கள் இந்த நிலைக்கு காங்கிரசை கொண்டுவந்து  நிறுத்தியுள்ளது என்றால்  மிகையல்ல. அதுவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைப் பற்றி சோல்லவே வேண்டாம், இருக்கும் 4 தலைர்கள் 8 திசையாக பிரிந்து  கிடப்பதை தமிழகமே அறியும், இந்த கட்சியில் இருக்கும் அனைவருமே தலைவர்கள் தான் தொண்டர்களே இல்லாத கட்சி என்றும் எதிர்கட்சிகள் கலாய்க்கும் அளவுக்கு காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது. காரணம், பதவிக்காகவும், பொறுப்புக்காகவுமே அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர்களாளவே காங்கிரஸ் காரர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் அது. 

 

இந்நிலையில்தான் சென்னை சத்தியமூர்த்தி பவனில்  காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே. எஸ் அழகிரி செய்தியாளர் சந்திப்பில் போது இரு தலைவர்கள் மோதிக் கொண்டுள்ளனர்.கே.எஸ் அழகிரி அமரும் மேடையில் காங்கிரஸ் கமிட்டியின் தொழிலாளர் பிரிவு நிர்வாகி முனுசாமி அமர்ந்தற்கு முன்னாள் நிர்வாகி பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து ஒருமையில் பேசியுள்ளார். மேடையிலிருந்து அவரை கீழே இறங்கும்படியும் வசைபாடியுள்ளார். இதன்  காரணமாக இரு தரப்பினரிடையே முதலில் வாய்த் தகராறு ஏற்பட்டு பின்னர் மோதலாக வெடித்துள்ளது. மாநிலத் தலைவர் கே. எஸ் அழகிரி முன்நிலையில் இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபர்ப்பு ஏற்பட்டது. இதனால் செய்தியாளர் சந்திப்பு சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

ஊடகங்கள் இருக்கும் போது தனது கண்ணெதிரில் நிர்வாகிகளின் மோதிக் கொண்டதால் செய்வதறியாமல் திகைத்த மாநிலத் தலைவர் கே.எஸ் அழகிரி சிறிது நேரம் திக்குமுக்காடிப் போனார். எல்லோர் முன்னிலையிலும் இரு தரப்பினரும் மாறி மாறி தகாத வார்த்தையால் திட்டி சண்டையிட்டனர். இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி வெளியில் அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஓய்ந்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் திமுகவிடம் அதிக இடங்களில் மேயர் பதவிகள் கேட்க இருப்பதாக கூறினார். மேலும் பேசிய அவர் இரண்டு தினங்களாக பாஜக- அதிமுகவினர் காங்கிரஸ் பற்றி பல அவதூறான விஷயங்களை பேசி வருகிறார்கள் எனவும், நீங்கள் ஒன்றில் உரிமை கோருக்கிறீர்கள் என்றால் அதில் உண்மை, நியாயம் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு கூட்டணி தான் காரணம் என்று பாஜக கூறுகிறதே என கூறிய அவர்,ஆம் கூட்டணி தான் காரணம்.. பாஜக கூட தான் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தீர்கள் என தெரிவித்தார். மேலும், நீங்கள் தனித்து நிற்பது உங்கள் கொள்கையா? என்று கேள்வி எழுப்பிய அவர், நீங்கள் இந்த தேர்தலில் கூட அதிமுக வுடன் கூட்டணி பேசுனீர்கள், ஆனால்  அதிக எதிர்ப்பு இருக்கும் என்ற கரணத்தினால் அதிமுக யோசித்தது என்று கூறினார். மேலும் காங்கிரஸ் அதிமுக பற்றி தவறாக ஏதும் சொல்லவில்லை, பாஜக வுடன் கூட்டணி வைத்த கரணத்தினால் மக்கள் உங்களை புறக்கணித்தார்கள், தமிழக மக்களுக்கு பாஜக செய்யும் தீங்கினை வேடிக்கை பார்த்தீர்கள், என்று தான் நாங்கள் கூறினோம். அதற்காக அதிமுக கோபித்து கொள்கிறது என்று பேசினார்.

மேலும் இன்றும் இந்தியாவில் பெரிய கட்சி காங்கிரஸ் தான், இன்றும் நாங்கள் வலிமையான அகில இந்திய கட்சி என்று தெரிவித்து கொள்கிறோம் எனவும், நிச்சயம் நாங்கள் ஒரு நாள் ஆளும் கட்சியாக வருவோம் என அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் மாநகராட்சியில் அதிக இடங்களில் மேயர் பதவி கேட்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மொத்தத்தில் கூட்டணி கட்சிகளுக்கு துணை மேயர், நகராட்சி , பேரூராட்சி பதவிகளை வழங்கி பிரச்சனையை முடித்துவிடலாம் என திமுக தலைமை திட்டமிட்டு வரும் நிலையில், மேயர் துணை மேயர் பதவிகளை கேட்க போவதாக கேஎஸ் அழகிரி அறிவித்திருப்பது திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.. 
 

PREV
click me!

Recommended Stories

இவரெல்லாம் ஒரு தலைவர்.. விஜய்யை முதன்முறையாக கடுமையாக விமர்சித்த இபிஎஸ்.. தவெகவினர் ஷாக்!
தலைக்கு ரூ.1 கோடி வேணும்.. விஜய் வைத்த டிமாண்ட்.. அலறும் தவெக நிர்வாகிகள்..!