CV Shanmugam: முதல்வர் ஸ்டாலின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது.. சீறும் சி.வி.சண்முகம் ..!

Published : Feb 26, 2022, 02:08 PM ISTUpdated : Feb 26, 2022, 02:09 PM IST
CV Shanmugam: முதல்வர் ஸ்டாலின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது.. சீறும் சி.வி.சண்முகம் ..!

சுருக்கம்

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் சோர்வடைந்திருந்த அதிமுக தொண்டர்கள். தற்போது திமுக அரசின் பழிவாங்கும் செயலை கண்டு வெகுண்டெழுந்து உள்ளதாக தெரிவித்தார். மக்கள் கொடுத்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி எங்களை அடக்கி வைப்பதற்கும், ஒடுக்கி வைப்பதற்கும் திமுக முயற்சிக்கிறது.

பொய் வழக்குகளை போட்டு அதிமுக முன்னாள் அமைச்சர்களை  முடக்கி விடலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம் செய்துள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் புரட்சி தலைவலி ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், பங்கேற்ற முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, நிகழ்ச்சியில் பேசிய அவர்;- மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்தாமல்  முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போட்டு அதிமுகவை அழிக்க நினைக்கும் திமுக அரசின் பகல் கனவு பலிக்காது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் சோர்வடைந்திருந்த அதிமுக தொண்டர்கள். தற்போது திமுக அரசின் பழிவாங்கும் செயலை கண்டு வெகுண்டெழுந்து உள்ளதாக தெரிவித்தார். மக்கள் கொடுத்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி எங்களை அடக்கி வைப்பதற்கும், ஒடுக்கி வைப்பதற்கும் திமுக முயற்சிக்கிறது என  சி.வி.சண்முகம்  குற்றம்சாட்டியுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மொத்தமாகப் பணிந்த எடப்பாடி..! பொதுக்குழுவில் இது மட்டும் நடந்தால் அதிமுகவே ஆட்சி அமைக்கும்..! அடித்துச் சொல்லும் ஆர்.எஸ். மணி..!
என்னையா முடக்க பாக்குறீங்க.. அதுஒருபோதும் நடக்காது.. திமுக அரசை அட்டாக் செய்து விஜய் ட்வீட்!