மேகதாதுவில் செங்கல்லை எடுத்துவைக்க விடமாட்டோம்.. கர்நாடகா அரசுக்கு எதிராக கொந்தளிக்கும் அண்ணாமலை.!

By Asianet TamilFirst Published Jul 29, 2021, 9:38 PM IST
Highlights

மேகதாதுவில் ஒரு செங்கல்லைக்கூட எடுத்து வைக்க தமிழக பாஜக அனுமதிக்காது என அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 

நாகர்கோவிலில் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சீனாவில் எல்லையிலிருந்து நாட்டின் பல்வேறு இடங்களில் பிரதமர் மோடி திருக்குறளை எடுத்துக்காட்டாகப் பேசிவருகிறார். அதனால், அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தது போல திருக்குறளை நிச்சயமாகத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து ஆகஸ்ட் 5 அன்று தஞ்சாவூரில் பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. மேகதாதுவில் ஒரு செங்கல்லைக்கூட எடுத்து வைக்க தமிழக பாஜக அனுமதிக்காது. கர்நாடக முதல்வரின் பேச்சு தவறானது. மேகதாது அணையை கட்ட விடமாட்டோம்.
அதிமுக-பாஜக கூட்டணியில் எந்தக் குழப்பம் இல்லை. உள்ளாட்சித் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும். அதிமுக பொதுபொதுக்குழு கூடிதான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள்தான் தற்போது வரை அதிமுகவில் உள்ளனர். எனவே அதிமுகவில் ஒற்றை தலைமை போன்ற ஊகமாகக் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாது. பாஜக தனிக்கட்சி, அதிமுக தனிக்கட்சி. அவர்களுடைய கட்சி விவகாரத்தில் பாஜக கருத்து கூற முடியாது.” என்று அண்ணாமலை தெரிவித்தார். 
 

click me!