234 தொகுதிகளிலும் ரஜினி கட்சியை ஜெயிக்க வைப்போம்... அர்ஜூன் சம்பத் தாறுமாறு சபதம்..!

Published : Dec 13, 2020, 10:24 PM ISTUpdated : Dec 13, 2020, 10:46 PM IST
234 தொகுதிகளிலும் ரஜினி கட்சியை ஜெயிக்க வைப்போம்... அர்ஜூன் சம்பத் தாறுமாறு சபதம்..!

சுருக்கம்

தமிழகத்தில் 234-தொகுதிகளிலும் ரஜினிகாந்த் கட்சியை ஆதரித்து இந்து மக்கள் கட்சி பிரச்சாரம் செய்து வெற்றி பெற செய்யும் என்று அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.  

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் நீண்ட நாட்களாக மக்கள் காத்திருந்தனர். காத்திருந்த மக்களுக்கு இப்போது திராவிட அரசியலுக்கு மாற்றாக ஆன்மீக அரசியல் வந்துவிட்டது. அதை மக்கள் விரும்புகிறார்கள். ஆன்மீக அரசியல் மையம் கொண்டுவிட்டது. தமிழகத்தில் ரஜினிகாந்த் வருகையை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கிறார்கள்.
குறிப்பாக தென்மாவட்டங்களில் உள்ள மக்கள் ரஜினி அரசியல் வருகையை வரவேற்று வருகிறார்கள். தமிழகத்தில் 234-தொகுதிகளிலும் ரஜினிகாந்த் கட்சியை ஆதரித்து இந்து மக்கள் கட்சி பிரச்சாரம் செய்து வெற்றி பெற செய்யும். இந்து மக்கள் கட்சியைப் பொறுத்தவரை மத்தியில் மோடி ஆதரவு. தமிழகத்தில் ரஜினிகாந்த்துக்கு ஆதரவு. நடிகர் ரஜினிகாந்த் தொடங்கபோகும் கட்சியில் இந்து மக்கள் கட்சி தொடர்ந்து பயணிக்கும்.
மேற்கு வங்காளம் மாநிலத்தில் மம்தா பானர்ஜி அரசியல் சாசனத்தை மீறி நாட்டின் இறையான்மைக்கு விரோதமாக வன்முறை அரசியல் செய்கிறார். எனவே மம்தா பானர்ஜி ஆட்சியை டிஸ்மிஸ் செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.” என்று அர்ஜீன் சம்பத் தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!